வியாழன், 27 ஜூலை, 2017

தேஜஸ்வி யாதவ் : ஆளுநர் ஒரு ஜனநாயக கொலைக்கு உடந்தை .. எல்லாம் நாடகம் ... குதிரைபேர பாஜக...


பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி, கவர்னரை சந்தித்து பெரும்பான்மையை நிருபிக்க வாய்ப்பு கேட்டுள்ளார். மேலும் நிதிஷ் கட்சியினருக்கு தைரியம் இருந்தால் தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். பீகாரில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. இன்று காலை 10 மணிக்கு நிதிஷ் குமார் பா.ஜ., முதல்வராக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நள்ளிரவில் கவர்னர் இல்லமான ராஜ்பவனை நோக்கி ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி, தனது கட்சியினருடன் ஊர்வலம் சென்றார். செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், தங்களை ஆட்சியமைக்க அழைக்கும் படி கவர்னரை வலியுறுத்த உள்ளதாக கூறினார். மேலும் இது ஜனநாயக படுகொலை எனவும் பா.ஜ.,வை சாடினார்.


தொடர்ந்து தேஜஸ்வியையும், அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் 5 பேரையும் சந்தித்து , கவர்னர் திரிபாதி ஆலோசனை நடத்தினார். டுவிட்டர் அர்ச்சனை முன்னதாக தேஜஸ்வி டுவிட்டரில் காலை 11 மணிக்கு எங்களை சந்திக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ள நிலையில் 10 மணிக்கு பதவியேற்பு விழா வைத்துள்ளது ஏன் எனவும், தன்னை நேர்மையானவர் என கூறு கொள்ளும் நிதிஷ் தற்போது எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்துள்ளது எந்த விதத்தில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏன் அவசரம்? கவர்னருடன் ஆலோசனை நடத்திய பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பின் செய்தியாளர்கள் சந்தித்த தேஜஸ்வி கூறுகையில்: ''கவர்னரிடம் எங்களுக்கு பெரும்பான்மையை நிருபிக்க வாய்ப்பு தர வேண்டும் என கேட்டுள்ளோம். இப்பொழுது நடப்பதை பார்த்தால் எல்லாம் முன்னரே முடிவு செய்யப்பட்டு நடத்தப்படும் நாடகம் போல் தெரிகிறது. ஏன் இவ்வளவு அவசரம் செய்யப்படுகிறது?. நேர்மையாக இருப்பவர்கள் ஏன் எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைக்க வேண்டும்?, உண்மையாக தைரியம் இருந்தால் தேர்தலை சந்திக்க வேண்டும்.'' என கூறினார்.  தினமலர்

கருத்துகள் இல்லை: