வியாழன், 27 ஜூலை, 2017

கீழடி நாகரிகம் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டது - கனிமொழி கேள்விக்கு பதில்!

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று திமுக எம்.பி. கனிமொழியின் கேள்விக்கு மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார். கீழடியில் மிகப்பழமையான நாகரிகத்துக்கு சொந்தமான தமிழர்கள் வாழ்ந்ததாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அங்கு நடைபெற்ற ஆய்வுகளைச் சீர்குலைக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தமிழர்களின் நாகரிகத்தை திரித்து வரலாற்று குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று தமிழ் அமைப்புகள் சந்தேகத்தை எழுப்பின. இந்நிலையில், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் 2,160 ஆண்டும், மற்றொரு பொருள் 2,220 ஆண்டுக்கும் முற்பட்டவை என்று மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி கேள்விக்கு மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா பதில் அளித்துள்ளார். கீழடியில் கிடைத்த 2 பொருளையும் அமெரிக்காவில் உள்ள பீடா அனலிடிக் என்ற நிறுவனம் ஆய்வு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.நக்கீரன்

கருத்துகள் இல்லை: