தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை
மேம்பாட்டுக் குழுமம் சார்பாக, சென்னை, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில்
சென்னை புத்தகத் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை,21) தொடங்கியது. இந்த
புத்தகத் திருவிழா 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனை சேய்யப்பட்டுள்ளதாக தமிழ் நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனையாளர்கள் குழுமத்தின் அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் தெரிவித்துள்ளார்.
புத்தக திருவிழாவில் 200க்கும் அதிகமான பதிப்பகங்களின் 250 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகத் திருவிழா வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடைபெறுகிறது அனுமதி இலவசம் என்பதால், மக்கள் ஆர்வத்துடன் புத்தகத் திருவிழாவை பார்வையிட்டு வருகின்றனர். இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 10 லட்சம் புத்தகங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் தெரிவித்துள்ளார்.
புத்தகத் திருவிழாவில் இன்று (ஜூலை,28)‘ராமானுஜர் 1000’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக