காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
மேலும் பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக, அவர் தனது இராஜினாமா கடிதத்தையும் கட்சியிடம் கையளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமை தொடர்பான விடயத்தில் கட்சிக்குள் இரு வேறு கருத்துகள் வலுவாக எழுந்துள்ளன. அதாவது, நிலையான முழுநேரத் தலைமை தேவை என மறைமுகமாக சோனியா காந்தியின் தலைமைக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதில் மற்றொரு தரப்பினர், சோனியா காந்தி அல்லது ராகுல் காந்தி தலைமையை ஏற்க வேண்டுமென காந்தி குடும்பத்துக்கு ஆதரவாக நிற்கின்றனர். மேலும், அடுத்தடுத்து தேர்தல் வரும் நிலையில், தலைமைப்பதவிப் பிரச்சினைக்கு உரிய தீர்மானத்தை எட்டாதமையினால் காங்கிரஸ் கட்சி பலமற்ற கட்சியாக காணப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்தி, பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக