2014 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழகக் காங்கிரசின் முக்கிய தலைவர்கள் போட்டியிடுவதிலிருந்து பின் வாங்கிய நேரத்தில் வெற்றி தோல்வி பற்றிய கவலையின்றி நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர் வெற்றி பெறவில்லை என்றாலும் பொன்னாரை மிகவும் நெருங்கி வந்தார்.
2019 தேர்தலின் போது நாகர்கோவிலை கிறிஸ்தவ நாடாருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிஷப்கள் முன் வைத்தனர். அந்த கோரிக்கைக்கு பின்னால் பொன்னாரின் சதி நோக்கம் இருந்தது.
தேர்தலை இந்து Vs கிறிஸ்தவர் முரண்பாட்டை தூண்டி அறுவடை செய்ய பொன்னார் திட்டமிட்டிருந்தார். பிஷப்கள் தங்கள் அழுத்தத்
தை பீட்டர் அல்போன்ஸ் மூலமாக வழங்கினர். சிறுபான்மையினர் நலனை பாதுகாக்க அவர்களில் ஒருவர் தான் வேண்டும் என்பது நிபந்தனை இல்லை என்ற அடிப்படையில் வசந்தகுமார் தேர்வு தவறில்லை.தேர்தலில் பொன்னாருக்கு அதானி பண உதவி வழங்கினார். வசந்தகுமார் தனது சொந்த கைக் காசை செலவழித்தார். வளர்ச்சி திட்டங்களில் அவர் கமிஷன் பெற்றதாக எந்த புகாரும் எவரும் எழுப்பியதில்லை.
அவரையொத்த பணக்கார எம்பிக்கள் வேறிருந்தாலும் அதிகமான சொத்து விபரத்தை தேர்தல் கமிஷனினில் காண்பித்தவர் வசந்த குமார் மட்டுமே. ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமில்லாமல் பழகியவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக