செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

BBC: மகாராஷ்டிரா கனமழை: ஐந்து மாடி கட்டடம் இடிந்து விழுந்தது; பலர் பலி

கனமழையின் காரணமாக மும்பையிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மஹத் என்ற பகுதியில் 5 தளங்களைக் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்துள்ளது.

இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் 47 வீடுகள் உள்ளதாகக் காவல் துறையினர் கூறுகின்றனர். இதுவரை இடிபாடுகளில் சிக்கி இருந்த 17 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளில் 70திற்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ராய்கட் மாவட்டத்தில் இடிந்து விழுந்த இந்த அடுக்குமாடி குடியிருப்பு 10 ஆண்டுகள் பழமையானது.   இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 18 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்றும் ராய்கட் மாவட்ட ஆட்சியர் நிதி சவுதிரி ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் மழை காலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் சம்பவம் பல நடந்துள்ளது. இந்த ஆண்டு பருவ மழையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200 ஆக உள்ளது. இந்தியாவில் மட்டும் 800பேர் பருவ மழையில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என ஏ.பி.எஃப் செய்தி முகமை குறிப்பிடுகிறது.

விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகளைத் தீவிரப்படுத்தத் தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்து இடத்தை அதிதி தட்கரே, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட இரு மகாராஷ்டிர அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர் என ஏ.என்.ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார் . உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது அழிந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: