சனி, 29 ஆகஸ்ட், 2020

90s Kids ஏன் வலதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்படுகின்றனர்.

Kandasamy Mariyappan : · 90s Kids ஏன் வலதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்படுகின்றனர். காரணம் நம்மிடம் இன உணர்வு (Ethnic pride), மொழி உணர்வு (Linguistic pride), கலாச்சார உணர்வு (cultural pride) குறைந்து விட்டது. இந்திய ஒன்றியத்தில் விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தெற்கே குறிப்பாக தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய இன உணர்வு போராட்டம் நடைபெற்றது 1. தென்னிந்தியாவில் ஒரு மிகப்பெரிய மருத்துவராகவும் சென்னையில் ஒரு மிகப்பெரிய மருத்துவமனைக்கு உரிமையாளராகவும் உருவாகியிருக்க வேண்டிய டாக்டர். நடேசன் (முதலியார்) அவர்கள் இன உணர்வால் 1912ல் திராவிட மக்களுக்காக, உரிமைகள் சார்ந்த சொத்துதான் அவசியம் என்று தனது பயணத்தை, உரிமை போராட்டத்தை கையில் எடுக்கிறார்.

2. தென்னிந்தியாவின் பிரபல மருத்துவராகவும் சென்னையில் மற்றும் ஒரு மிகப்பெரிய மருத்துவமனைக்கு உரிமையாளராகவும் உருவாகியிருக்க வேண்டிய டாக்டர். மாதவன் (நாயர்) திராவிட இன உணர்வின் காரணமாக 1917ல் தனது வாழ்க்கையை இன உணர்வுக்காக அர்ப்பணிக்கிறார். உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் திராவிட இன நிலைப்பாட்டை பிரிட்டிஷ் அரசிடம் எடுத்து கூறுவதற்காக இங்கிலாந்து சென்ற டாக்டர். மாதவன் (நாயர்) அங்கே இறந்து விடுகிறார்.

3. செல்வ சீமான் தியாகராயர் அவர்கள் பொருள்தான் முக்கியம் என்று எண்ணியிருந்தால் இன்றைய தியாகராயர் நகர், மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு உரிமையாளராக உருவாகியிருந்திருப்பார். ஆனால் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஏற்பட்ட ஒரு சிறு மன காயம் 1917ல் செல்வ சீமான் தியாகராயர் அவர்களை இன உணர்வு போராட்டத்தை நோக்கி தள்ளியது.

4. பணம், புகழ் மட்டுமே வாழ்க்கை என்று எண்ணியிருந்தால் காங்கிரஸ் பேரியக்கத்திலேயே பெரியார் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்திருப்பார். ஆனால் ஒரு சமபந்தி விருந்து அவரை இன உணர்வு போராட்டத்தை நோக்கி தள்ளுகிறது. சுயமரியாதைதான் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துரைக்கிறார்.

5. அண்ணா அவர்கள் பணம், தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமே முக்கியம் என்று இருந்திருந்தால் அவர்களின் தமிழ், ஆங்கில இலக்கிய புலமையால் பல கல்லூரிகளுக்கு துணை வேந்தராக பொறுப்பு வகித்திருந்திருப்பார். ஆனால் தனது வாழ்நாள் முழுவதும் தமிழ், தமிழ்நாடு, தமிழ்நாட்டு மக்களுக்காகவே சிந்தித்து செயல்பட்டார்.

6. பணம் மட்டுமே முக்கியம் என்று எண்ணியிருந்தால், கலைஞர் அவர்கள் பராசக்தி படத்திற்கு பிறகு வளசரவாக்கத்தில் 100 ஏக்கர் நிலத்தில் ஒரு Studioவை கட்டமைத்திருப்பார். ஆனால் தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்று இருந்தார்.

ஆனால் அவர்களுக்கு பணம் புகழைவிட திராவிட இன பற்றுதான் அவசியம் என்று உணரவைத்தது இங்கே இருந்த சமூக பாகுபாடு.

இவர்கள், தங்களின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்காமல் திராவிட இனம், தமிழ், தமிழ்நாடு என்று தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்ததால்தான் தமிழ்நாடும், தமிழ்நாட்டு திராவிட மக்களும் எல்லா துறைகளிலும் முன்னணியில் இருக்க முடிகிறது.

ஆனால் அவர்களின் அந்த உழைப்பு மற்றும் தியாகத்தை பற்றி 80s, 90s kidsகள் உணர விடாமல், ஒரு சிலருடைய தனிப்பட்ட பணம் புகழுக்காக, வடக்கத்தியர்கள் நம்மை அடிமை படுத்த வழிநடத்திச் சென்று கொண்டிருக்கின்றோம்.

எந்த ஒரு பொருளும் எளிதில் கிடைக்கும் பொழுது அதன் மதிப்பு (value) நமக்கு தெரிவதில்லை. அதுபோல் தான் இன்று நமக்கு கிடைத்திருக்கும் அரசியல் விடுதலை மற்றும் திராவிட இன மேம்பாடு எப்படி கிடைத்தது என்று அறியாமல் அதற்கு மூடுவிழா நடத்த துடித்துக் கொண்டு இருக்கிறோம்.

பன்னீர்செல்வங்கள், பழனிச்சாமிகள், தமிழிசைகள், ராதாகிருஷ்ணன்கள், அர்ஜுன் சம்பத்துகள், கிருஷ்ணசாமிகள், இளையராஜாக்கள், தமது இனத்தை அடிமை உலகிற்கு வழிநடத்திச் செல்கிறோம் என்று உணராமல் மிகப்பெரிய தவறுகளை செய்து கொண்டுள்ளன

கருத்துகள் இல்லை: