வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

இந்தியை நீக்குங்க.. நீக்க முடியலன்னா 22 மொழிகளையும் சேருங்க".. பெங்களூர் மெட்ரோவுக்கு கன்னட மொழி மேம்பாட்டு ஆணையம்

Hemavandhana -tamil.oneindia.com: பெங்களூரு: "எல்லா இடத்துலயும் இருக்கிற ஹிந்தியை மொத்தமாக நீக்க வேண்டும்" என்று பெங்களூரு மெட்ரோ ரயில்வே நிர்வாகத்திடம் ஒரு உத்தரவிடப்பட்டுள்ளது.. "ஒன்று ஹிந்தியை நீக்குங்க, இல்லையென்றால், 22 மொழிகளையும் அதுகூட சேர்த்து வைங்க" என்று கன்னட மொழி மேம்பாட்டு ஆணையம் இந்த உத்தரவில் அதிரடியாக உள்ளது. கர்நாடகாவில், தாய்மொழியான கன்னடத்தை பலப்படுத்தவும், மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.. அதில் ஒன்றுதான் கன்னட மொழி மேம்பாட்டு ஆணையம் என்பது! யாரெல்லாம் கன்னட மொழி பேசாத ஊழியர்கள் இருக்கிறீர்களோ, அவர்கள் 6 மாசத்துக்குள்ள கன்னட மொழியை கற்க வேண்டும், இல்லாவிட்டால் டிஸ்மிஸ்தான் என்று வங்கிகளில் பணிபுரிபவர்களுக்கு உத்தரவு ஒன்றுகூட 2 வருடத்துக்கு முன்பு போடப்பட்டது.
கன்னட மொழி கன்னட மொழி இது சம்பந்தமாக முன்னாள் முதல்வர் சித்தராமையா பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்திருக்கிறார்.. மேலும் முன்பை விட சமீப காலமாக கன்னட மொழி மேம்பாட்டு ஆணையம் வேகமாக செயல்பட்டு வருகிறது..  

இந்த நிலையில் தென் மாநிலங்களில் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக கொந்தளிப்பும், எதிர்ப்பும் நிலவி வரும் நிலையில் இந்தி மொழியை மொத்தமாக தூக்குங்க என்று பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் கன்னட மொழி மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளதுபெங்களூரு மெட்ரோவில் கன்னடம் பயன்பாட்டை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.. அதில், கன்னட மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகளிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசியதாவது: "மெட்ரோ ரயில் நிலையங்கள். மெட்ரோ ரயில்களில் ஹிந்தி மொழியை பயன்படுத்தியது தொடர்பாக எங்களுக்கு நிறைய புகார்கள் வந்திருக்கின்றன.. கடந்த 2017-ல் கன்னட ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி எத்தனையோ, மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்த போர்டுகளில் ஹிந்தி வார்த்தைகளை கருப்பு மை கொண்டு மறைத்தனர்.

இனி இந்த மாதிரி சம்பவம் நடக்காமல், பார்த்துக்கணும்.. இப்போதைக்கு எமர்ஜென்சி போர்டுகள், அறிவிப்புகள் ஆகியவற்றில் ஹிந்தி மொழி பயன்படுத்தப்படுகிறது... எனவே அந்த ஹிந்தி மொழியையும் முழுசா நீக்கிடுங்க.. இல்லை என்றால், 22 மொழிகளையும் சேர்த்து கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார். இந்தியாவில் 22 அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகள் உள்ளன. ஆனால் இல்லாத தேசிய மொழியான இந்தியை மட்டுமே மத்திய அரசு உயர்த்திப் பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

 இதை பற்றி கன்னட மொழி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் டிஎஸ் நாகபரணா சொல்லும்போது, "மெட்ரோ ரயில் நிலைய போர்டுகளில் ஹிந்தி மொழியை பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் நீக்கிவிட்டது... ஆனால் ட்ரெய்ன்களிலும், ரயில்வே ஸ்டேஷன்களிலும் எமர்ஜென்சி அறிவிப்புகள், தகவல்கள் இன்னமும் ஹிந்தி மொழியில்தான் இருக்கின்றன.. 

 

அதாவது கன்னடம், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளில் உள்ளது.. இதில் ஹிந்தியை மட்டும் எடுக்க சொல்லி இருக்கோம். 22 மொழிகள் 22 மொழிகள் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவிலும் மெட்ரோ ரயில் சேவை உள்ளது.. அங்கும் ஹிந்தியை நீக்குங்கள்.. இல்லையென்றால், 22 மொழிகளையும் அதுகூட சேர்த்து கொள்ளுங்கள் என்று சொல்லி உள்ளோம்.. 

ஹிந்திக்கு இடம் கொடுப்பதாக இருந்தால், நம் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மொழிகளுக்கும் இடம் கொடுக்க வேண்டும் 

இந்த மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சகோதரர்களும் இங்கே வசிக்கிறார்கள். அவர்களின் மொழிக்கு முதலில் முன்னுரிமை கொடுக்கலாமே? என்றார். கன்னட மொழி மேம்பாட்டு ஆணையம் இந்தி விவகாரத்தை கையில் எடுத்திருப்பதால், இது சம்பந்தமாக வரும் நவம்பரில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பாக பதில் தரப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கிளம்பியுள்ள இந்த பொறி தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் பற்றிப் படருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

கருத்துகள் இல்லை: