ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

கொரோனாவை தடுக்க களிம்பு - அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

மாலைமலர் : வாஷிங்டன்: உலக நாடுகளையெல்லாம் உலுக்கி வருகிற கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்று, கொரோனாவை தடுக்கும் களிம்பு ஒன்றை உருவாக்கி உள்ளது. இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்பேரில் இந்த களிம்பு பரிசோதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பரிசோதனைக்கூட அறிக்கை, இந்த களிம்பை (மூக்கில்) தடவிக்கொண்ட 30 வினாடிகளுக்கு பிறகு எந்த வைரஸ் தொற்றும் கண்டறியப்படவில்லை என கூறுகிறது. இந்த களிம்பு ‘டி3எக்ஸ்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.           இதுபற்றி அட்வான்ஸ்டு பெனிட்ரேசன் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான டாக்டர் பிரையன் ஹூபர் கூறும்போது, “இந்த களிம்பு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வைரஸ் பரவ காரணமாக உள்ள மூக்கு வழி பரவல் வாய்ப்பை குறைக்கும். இது ஒரு பெரிய விஷயம்.இது .     கொரோனாவுக்கு எதிரான முதல் வரிசை தற்காப்பாக இருக்கலாம். இது சக்தி வாய்ந்த மற்றும் பயனுள்ள தடுப்பு மருந்து” என தெரிவித்தார்.



இந்த மருந்தை வாங்குவதற்கு டாக்டர் சீட்டு கூட தேவைப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்த பிறகு மூக்கு துவாரங்கள் மீது தடவிக்கொண்டால் அது வைரஸ் நுழைவதைத் தடுக்கும்

கருத்துகள் இல்லை: