maalaimalar : அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் கருப்பினத்தைச் சேர்ந்தவரின் முதுகில் பொலிஸ் சரமாரியாக சுட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது.
கெனாஷா நகரில் நேற்று உள்ளூர் பிரச்சனை தொடர்பாக ஜக்கப் பிளேக் (Jacob Blake)என்ற கருப்பினத்தவரை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டனர். தனது குழந்தைகள் உள்ள காரை திறந்து உள்ளே செல்ல முயன்ற பிளேக்கின் முதுகில் பொலிஸார் 7 முறை சுட்டதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வீடியோ வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிசை கண்டித்தும், இன மற்றும் நிறவெறிக்கு எதிராகவும் நடந்த போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் பல அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. கருப்பினத்தவர் சுடப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கலவரம் காரணமாக கெனோஷா கவுண்டியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக