ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

ஆயிரக்கணக்கான நிர்வாண வீடியோக்கள் நூற்றுகணக்கானோர் பாலியல் வன்முறை .. பெண்ணின் அதிரடி குற்றசாட்ட்டுக்கள் .. தெலுங்கான பிரபலங்கள் உட்பட? வீடியோ

tamil.oneindia.com - VelmuruganP : ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் மகளின் உதவியாளர் உள்பட 143 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேல் நிர்வாணமாக வீடியோக்கள் எடுத்துள்ளனர். அவற்றை ஆன்லைனில் வெளியிட்டுள்ளார்கள் என இளம் பெண் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தெலங்கானா மாநில முதல்வர் மகளின் முன்னாள் உதவியாளர், வக்கீல்கள், திரை உலகினர் உட்பட பலர் தன்னை கடந்த 10 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்து விட்டதாக, தெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த சரிதா (25) என்பவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். ஹைதராபாத்தின் பச்சகுட்டாவைச் சேர்ந்த சரிதா தனது மனுவில் 'கடந்த 2009ம் ஆண்டு கொண்டாரெட்டி கிராமத்தை ரமேஷ் என்பவருக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு கணவரின் பெற்றோர் மற்றும் சகோதரர், சகோதரி ஆகியோர் 9 மாதங்களாக தொடர்ந்து சித்ரவதை செய்தார்கள் 

கல்லூரியிலும் பலாத்காரம்என்னுடைய கணவரின் குடும்பத்தை சேர்ந்த ஆண்களே பலமுறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்கள். இதனால், கடந்த 2010ம் ஆண்டு என் கணவர் என்னை விவகாரத்து செய்தார். இதனால் அதன்பிறகு படிப்பதற்காக கல்லூரிக்கு சென்றேன். அப்போது, எனக்கு சிலர் அறிமுகம் ஆனார்கள். அவர்கள் என்னுடைய வாழ்க்கையை முழுவதுமாக சீரழித்துவிட்டார்கள்.

lசென்னை வழக்கறிஞர்கள் .. இந்திய மாணவர் சங்கத்தினர், தெலங்கானா மாநில முதல்வர் மகள் கவிதாவின் முன்னாள் உதவியாளர் சந்தோஷ் ராவ், ஜிம் உரிமையாளர், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர்கள், பெங்களூரை சேர்ந்த நாத் ஆகியோர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்கள். அவர்கள் என்னை ஒரு, அறையில் அடைத்து  வைத்து கொடுமைப்படுத்தினார்கள் 

 

மிரட்டி வீடியோ எடுத்தனர் கத்தியை காட்டி மிரட்டியதுடன், பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவோம், ஆசிட் ஊற்றி விடுவோம் என்று என்னை தொடர்ந்து மிரட்டி நிர்வாணமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்தார்கள். அந்த வீடியாக்களை அவர்களின் நண்பர்களுக்கு செல்போன் மூலமாக அனுப்பினார்கள். அவர்களையும் வரவழைத்து என்னுடன் பாலியலில் உறவில் ஈடுபடுத்தினார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்படி 2010ம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளில் என்னை இதுபோல், 143 பேர் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்துவிட்டார்கள். 

என்னை பலாத்காரம் செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அந்த புகார் மனுவில் சரிதா கூறியுள்ளார். இதனிடையே சரிதனா 139 பேரின் பெயரை சரியாக கூறியுள்ளார். 4 பேரை தனக்கு அடையாளம் தெரியவில்லை என்று கூறியுள்ளார். இந்த மனுவை பெற்றுக் கொண்ட பஞ்சகுட்டா போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் கூறியிருக்கிறார்கள். 42 பக்கத்தில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் விவகாரம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: