திங்கள், 24 ஆகஸ்ட், 2020

கோயிலுக்குள் கொலை .. அர்ச்சகர் கோபிநாத் கைது .. கோயிலுக்குள் உடலை புதைத்தார் .. பண்ருட்டி

  Isai Inban : · பண்ருட்டி கோவிலுக்குள் கொலை!    பண்ருட்டி வேணு கோபாலசாமி கோவில் அர்ச்சகர் கோபி நாத் (வயது 52). இவர் ஜோதிட பலா பலன்களையும் கூறி வந்துள்ளார். இவர் வீட்டில் வேலை செய்த பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால், அப்பெண்ணுடன் குடும்பம் நடத்திவந்த கண்ணதாசன் என்பவரைக் கொலை செய்து ோவிலிலே புதைத்த சம்பவம் அரங்கேறி யுள்ளது. பண்ருட்டி வி.ஆண்டிக்குப்பத்தை சேர்ந்த மஞ்சுளாவுக்கு (வயது 29) 3 குழந் தைகள் உள்ளனர். கணவன் மோகனைப் பிரிந்த மஞ்சுளா பணிக்கன்குப்பத்தை சேர்ந்த கண்ணதாசன்(34) என்பவருடன் கடந்த 5 ஆண்டுகளாக, குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஆனால், தன்வீட்டில் வேலை செய்யும் மஞ்சுளாவுடன் அர்ச் சகர் கோபிநாத் பழக்கத்தைத் தொடர்ந் துள்ளார். இருவரும் அடிக்கடி செல் பேசியில் பேசி வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அர்ச்சகர் கோபிநாத்,மஞ்சுளா இருவரையும் கண்ணதாசன் கண்டித் துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி கடைக்கு வேலைக்கு சென்ற கண்ணதாசன், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் பண் ருட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.     

அப்போது கண்ணதாசன், மஞ்சுளா ஆகியோரின் செல்பேசி எண்ணை பெற்று, அதில் யார்-, யாரிடம் பேசியுள்ளார்கள் என்று ஆய்வு செய்தனர். அப்போது மஞ்சுளா பலரிடம் செல்பேசியில் பேசி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவ ரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதே ஊரில் உள்ள வேணுகோபாலசாமி கோவில் அர்ச்சகரும், ஜோதிடருமான கோபிநாத்துடன் அடிக்கடி செல்பேசியில் பேசி வந்துள்ளார். இதை கண்ணதாசன் கண்டித்துள்ளார். மேலும், கோபிநாத்தின் வீட்டுக்குச் சென்று அவரையும்


, அவரது குடும்பத்தினரையும் கண்ணதாசன் திட் டியதாகத் தெரிகிறது.

இதனால் கண்ணதாசனை தீர்த்துக் கட்ட மஞ்சுளாவும், கோபிநாத்தும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 12ஆம் தேதி கண்ணதாசனை சமாதானப்படுத்துவ தற்காக கோபிநாத் வேணுகோபால

சாமி கோவிலுக்கு அழைத்து வந்தார். அப்போது அங்கிருந்த மஞ்சுளா மற்றும் சிலர் சேர்ந்து இரும்பு கம்பியால் கண்ண தாசனை சரமாரியாக அடித்து கொலை செய்தனர். பின்னர் கோவிலில் பூஜை பொருட்கள் வைக்கப்படும் அறையில் பள்ளம் தோண்டி கண்ணதாசனின் உடலை புதைத்தனர்.

தன் மீது யாருக்கும் சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக மஞ்சுளா காவல்நிலையத்தில் புகார் செய்து நாடக மாடியுள்ளார். இதையடுத்து மஞ்சுளா, கோபிநாத் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய சிலரை காவல்துறையினர் தேடி வருகின் றனர்.

இதற்கிடையே கடந்த 20.8.2020 அன்று நள்ளிரவு 1 மணியளவில் வேணு கோபாலசாமி கோவில் பூஜை பொருட்கள் அறையில் புதைக்கப்பட்டிருந்த கண்ண தாசனின் உடல், வட்டாட்சியர் உதய குமார் முன்னிலையில் தோண்டி எடுக்கப் பட்டது. பின்னர் அவரது உடற்கூராய்வு பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோவில் அர்ச்சகராலேயே திட்டமிட்டு ஒருவர் கொலை செய்யப்படுவதும், கோவில் அறையிலேயே கொல்லப்பட்ட வரின் உடல் புதைக்கப்பட்டதும் அப் பகு தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: