வழக்கை விசாரித்த ஹைக்கோர்ட் நீதிபதி நீதிபதி ராஜா முகம்மது (Judge Raja Muhammad Shahid Abbasi) அதிர்ச்சிகரமான தீர்ப்பை தெரிவித்திருக்கிறார். அதாவது...
○ மரியா தன்னை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து வற்புறுத்தி திருமணமும் செய்த ஷஹ்பாஸோடு தொடர்ந்து அவருடைய மனைவியாக வாழவேண்டும்
○ மதமாற்றம் நடந்தது நடந்ததுதான். மீண்டும் மரியா கிருஸ்தவராக மாறமுடியாது.
அதைவிடவும் கொடுமை...
○ தீர்ப்பை வழங்கிய நீதிபதி மரியாவை பார்த்து, "ஒரு நல்ல இஸ்லாமிய மனைவியாக வாழக்கற்றுக்கொள்" என்றும் உபதேசித்திருக்கிறார்(?!)
மரியாவின் வயதை அவருடைய பிறப்பு சான்றிதழ்களின் துணைகொண்டு சுட்டிக்காட்டி, இந்த திருமணமே செல்லாது என்று வாதாடிய வழக்கறிஞரின் வாதத்திற்கு சற்றும் செவிசாய்க்காத நீதிபதி ராஜா முகம்மது, குடும்ப வறுமை காரணமாக கொரோனா காலத்திலும் வேலைக்குச்செல்ல நேர்ந்திருந்த ஒரு அபலைச்சிறுமியின் வாழ்க்கையை சிதைத்திருக்கிறார் என்றால் அது மிகையில்லை.
இது ஆணாதிக்கமா, மத போதையா இரண்டும் கலந்த கலவையா..?
காரணம் எதுவாயினும் பெண் ஒரு போகப்பொருள் என்ற முடைநாற்றமெடுக்கும் சமூக அவலம் இன்னும் ஒழிந்தபாடில்லை என்பது மட்டுமே வலிக்கும் நிஜம்..!
வேதனையுடன்,<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக