ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே இருந்தால், அவர்கள் தன்னார்வ அடிப்படையில் பள்ளிகளுக்கு சென்று வர அனுமதிக்கப்படுவார்கள்.
உயர்கல்வி பயிலும் மற்றும் ஆராய்ச்சிப்பணியில் இருப்பவர்கள், சூழ்நிலைக்கு ஏற்ப மத்திய உள்துறையுடன் மத்திய உயர்கல்வித்துறை நடத்தும் ஆலோசனை அடிப்படையில் பணிகளை தொடங்க அனுமதிக்கப்படுவார்கள்.
மெட்ரோ ரயில் சேவை அமலில் உள்ள மாநிலங்களில், வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் படிப்படியாக இயங்க அனுமதிக்கப்படும். அதுவும் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்தறை அமைச்சம் வெளியிடும் வழிகாட்டு நெறிகள் அடிப்படையில் இருக்கும்.
சமூக, கல்வி, விளையாட்டு, பொழுதுபாக்கு, கலாசாரம், மதம், அரசியல் நிகழ்ச்சிகளில் அதிகபட்ச வரம்பாக 100 பேர் பங்கேற்க அனுமதிக்கப்படும். இந்த அனுமதி வரும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். அதில் பங்கேற்பவர்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும். அனைவரும் தெர்மல் ஸ்கேனிங், கை சுத்திகரிப்பான்கள் மற்றும் சானிட்டைசர்கள் பயன்படுத்தப்படுவது அவசியமாகும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
எனினும், திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 50 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது என்றும், இறுதி நிகழ்வுகளில் அதிகபட்சமாக 20 பேருக்கு மிகாமல் இருப்பது கட்டாயம் என்றும் இந்த நடைமுறை வரும் செப்டம்பர் 20 வரை பொருந்தும். அதற்கு மறு தினத்தில் இருந்து இந்த எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக