ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

ஒங்க பொதுவுடமை நடிப்புல தீய வைக்க ! வேண்டாம் மின்னணு வாக்குப்பதிவு !

Parthiban Pakirisamy : ஒங்க பொதுவுடமை நடிப்புல தீய வைக்க ! தெரிந்தே சூத்திர மக்களுக்கு எதிராக நன்றி மறந்து சுயநலத்திற்காக காவிகளின் பின்னால் போகிறவனை சங்கி என்று முழங்கும் நாம்; மின்னணு வாக்கு தவறு அதனால் நாம் இழந்தது ஏராளம் என்று தெரிந்திருந்தும் அதுபற்றி ஒரேயொரு வார்த்தை மருதுக்காக கூட பேசாமல், வெறும் கடந்த கால பெருமைகளையும் வெட்டி கதைகளையும் பேசும் நாம்தான், உண்மையான மற்றும் சுயமரியாதை எனும் பெயரில் உலவும் தன்மானமற்ற படித்த அதிபயங்கர ஆபத்தான மேட்டுக்குடி சங்கிகள் என்க. காவிகளின் பின்னால் ஓடுபவனுக்கு இத்தனை சிந்தனை அறிவு இல்லை. ஒருநாள் இல்லையொருநாள் அவன் மாற வாய்ப்புள்ளது; ஆனால் தெரிந்தே நடிக்கும் நாம்தான் அதிபயங்கர ஆபத்தான சமூக விலங்குகள். வருங்காலத்தில் இந்த நாட்டில் ஏதேனும் கேடு விலையுமானால் அது நம்மால் மட்டுமே என்க!

மின்னணு வாக்கிற்கு எதிராக குரல்கொடுத்தால் செத்தா போயிடுவீங்க? பொழுதனிக்கும் பெண்களை வருணிக்கும் கதைகளை எழுத நமக்கு நேரமிருக்கிறது, சினிமா கூத்தாடிகளை பாராட்ட நேரம் இருக்கிறது, வெட்டி கதை பேச நேரம் இருக்கிறது, எங்க ஊட்டுல கறி சோறு மீன்கொழம்பு ன்னு எழுத நேரமிருக்கிறது...... தக்காளி, மின்னணு வாக்கு தவறுன்னு ரெண்டு வார்த்தை பதிவு போட நமக்கு நேரமில்லை....!

விதைக்கவே இவ்வளவு தயக்கம் காட்டும் நாம், அறுவடைக்கு வருகிறோம் விளைச்சலே இல்லையென்று..... எவ்வளவு பேதைமை?

இந்த நாட்டில் எவ்வளவு பேச்சாளர்கள் எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் உள்ளீர்கள்? உங்களுக்கெல்லாம் என்னவாயிற்று? ஒவ்வொருவரும் இப்பொழுது பேச ஆரம்பித்தாலே ஒரு முடிவிற்கு வந்துவிடலாமே பிறகேன் தாமதம் சுயமரியாதை சிங்கங்களா சொல்லுங்கள் !

மின்னணு வாக்கு முறை வேண்டாம் ன்னு ஒரு வரி எழுத கூட மனமில்லாத நமக்கெல்லாம் எதுக்கு முகநூல் சொல்லுங்கள்? நம் கல்வி வளம் சொத்து உழைப்பு பொருளாதாரம் எல்லாமே பறிக்கப்பட்டுக்கொண்டிருப்பதை வெறுமனே புலம்பிக்கொண்டு வேடிக்கை மட்டும் பார்க்கும் நாம் எல்லோரும் சோறுதான் திங்கிறோமா என்று நம்மை நாமையே கேட்டு தெளிவு படுத்திக்கொள்ளும் தருணமிது தோழர்களே !

இன்னமும் எப்படி சொல்ல.....!

பார்த்திபன் ப
19/08/2020

 

எல்லோரும் சேர்ந்து சொல்வோம்
------------------------------------------------
நமக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ படிப்பை ஏன் கோட்டைவிட்டோம்? மருத்துவ கனவோடு வாழ்ந்த அனிதாவை ஏன் பறிகொடுத்தோம்?

நீட் தேர்வு வந்ததால் !
நீட் தேர்வு ஏன் வந்தது?

சிந்தியுங்கள் ......! காகித வாக்குமுறை இருந்திருக்குமானால் வந்திருக்குமா?

எல்லோரும் சேர்ந்து சொல்வோம்; வேண்டாம் மின்னணு வாக்கு முறையென்று !
---------
மின்சார விலை எப்படி உயர்ந்தது?
உதய் மின் திட்டத்தால்

எப்படி இத்திட்டம் வந்தது ?

சிந்தியுங்கள் ......! காகித வாக்குமுறை இருந்திருக்குமானால் வந்திருக்குமா?

எல்லோரும் சேர்ந்து சொல்வோம்; வேண்டாம் மின்னணு வாக்கு முறையென்று !
---------

புதிய கல்வி கொள்கை ஏன் வந்தது ?
சிந்தியுங்கள் ......! காகித வாக்குமுறை இருந்திருக்குமானால் வந்திருக்குமா? கூட்டாட்சி அல்லவா இருந்திருக்கும்?

எல்லோரும் சேர்ந்து சொல்வோம்; வேண்டாம் மின்னணு வாக்கு முறையென்று !
---------

 

வேண்டாம் மின்னணு வாக்குப்பதிவு !

இப்படி 2014 முதலே பலவிதமான ஆதாரங்களுடன் பேசி எழுதி வருவதன் நோக்கம் நாம் தேர்தல் அரசியலை ஆதரிக்கிறோம் என்று பொருளல்ல. மாறாக நமக்கிருக்கும் கொஞ்சம் வளமும் திருடப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக. ஏப்ரல் 2014ல் நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது மின்னணு வாக்கு இயந்திரத்தின் செயல்பாடுகள் மற்றும் அதிலுள்ள மோசடிகள் குறித்து தேர்தல் முடிவுகள் வரும்வரையில் பலவிதமான ஆதாரங்களுடன் பதிவுசெய்தோம். 2016 தமிழ்நாடு மற்றும் 2017 குஜராத் தேர்தலில் வாக்கு நடைபெறும் பொழுதே எப்படி கைமாறுகிறது என்று உடனுக்குடன் பலவிதமான செல்போன் ஆதாரங்களுடன் பதிவிட்டேன். 2018ல் இது தொடர்பாக எப்படியெல்லாம் வாக்குகள் திருடப்படுகின்றன என்று ஆடியோ மூலம் பேசி வாட்சாப் செயலி மூலம் பரப்பினோம். 2019 லும் மக்களவை தேர்தலின் போது பலவித பதிவுகள் மூலம் பதிவு செய்தோம், இன்று வரையும் தொடர்கிது!

காரணம்,
தேர்தல் அரசியல் மீதான நம்பிக்கையால் அல்ல. வேறு எந்த மாற்றும் இல்லை என்பதாலும், நாளைக்கே பொதுவுடைமையை கட்டமைத்து மக்களை திரட்டி புரட்சி நடந்துவிடும் எனவே இந்த மக்களாட்சி தேர்தலை கன்டுகொள்ள தற்போதைய தேவையென்ன வந்தது எனும் பிற்போக்கு சிந்தனையாளரும் நாமல்ல; மாறாக, அப்படி நினைத்தவுடன் புரட்சி நடப்பதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு என்க. ஒருவேளை நடந்தேரும் வேளையில், இந்த தேர்தல் முறையை தடுத்து காகித முறைக்கு மாற்றாவிட்டால், வெறும் மனித எலும்புக்கூடுகள்தான் மிஞ்சும் எனும் எதார்தத்தையும் அறிந்தவர்கள் தான் நாம்.

எல்லோரும் பேசுகிறார்கள் தனியே போய்விடவேண்டும் என்று, அது தற்போதைய சூழலில் சாத்தியப்படாத ஒன்று எனும் உண்மையை அவர்கள் புரிந்துணர மறுக்கிறார்கள், அப்படி கனவில் கூட சாத்தியமில்லை என்பதுதான் நிச வாழ்வின் உண்மை. அலங்கார வார்த்தைகளும் பொருளாதார அரசியல் பார்வையற்ற வெற்று கூச்சல்களும் சமையலுக்கு ஆகாது என்க.

நாம் புரட்சி பொதுவுடைமை புதிய அரசியல் தமிழ் தேசியம் என்று பேசி பேசி கனவு கண்டுகொண்டிருந்த சொற்ப காலத்தில்; நம்முடைய கல்வி திருடப்பட்டுவிட்டது, மின்சாரம் போச்சு, சுற்றுசூழல் போச்சு, மொழி ஊசலில் உள்ளது, பண்பாடு வடபுலத்தால் நிறைகிறது, பொருளாதாரம் போச்சு, வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன, பலவிதமான ஆபத்தான திட்டங்கள் வந்துவிட்டன என்றால், நாம் இப்பொழுதாவது புரிந்துணர வேண்டாமா? எதிர்கால திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கட்டும், அதுவரை இந்த தேர்தல் அரசியல் தானே நம்மை ஆளப்போகிறது? அப்படியெனில் அதை மீண்டும் கூட்டாட்சி தத்துவத்திற்கே திருப்புவதற்கு காகித வாக்கு சீட்டு முறையை பின்பற்ற நாம் முயற்சி செய்ய வேண்டாமா சொல்லுங்கள்?

எனது புரிதலில் தவறு இருக்குமேயானால் சரியான எதார்த்த வாழ்வியலுக்கு உகந்த திட்டத்தை வைக்கவும்; சரியெனில் மின்னணு வாக்கை மாற்றி காகித வாக்குமுறைக்கு குரல் கொடுக்கவும்!

போட்டியில் வெற்றிபெற வேண்டுமானால் முதலில் பங்கு கொள்ள வேண்டும் தோழா!

அன்புடன்

பார்த்திபன் ப
20/08/2020

 

 

பல்வேறு தேசிய இனங்களை கொண்ட நாட்டில் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் அரசு சார்ந்த யோகா பயிற்சியில், இந்தி தெரியாதவர்கள் பயிற்சியிலிருந்து வெளியேறலாம் என்கிறார் தொடர்புடைய துறை செயலர் என்றால்......

மத்தியில் கூட்டாட்சி இருந்திருந்தால் இப்படி நடக்குமா? இது எதனால் வந்த வினை?

காகித வாக்குமுறை இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?

சொல்வோம் வேண்டாம் மின்னணு வாக்குமுறை !
------------------------------------------
ஒரு சாதாரண விமான நிலைய காவல்படை நபர், மத்திய அமைச்சரையே பார்த்து இந்தி தெரியாத நீங்கள் எப்படி இந்தியர் எனலாம் என்கிறார் என்றால்.......
மத்தியில் கூட்டாட்சி இருந்திருந்தால் இப்படி நடக்குமா? இது எதனால் வந்த வினை?

காகித வாக்குமுறை இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?

சொல்வோம் வேண்டாம் மின்னணு வாக்குமுறை !

கருத்துகள் இல்லை: