செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

கொரோனா பரவல் .. உலக ரோல் மாடல்களும் - போட்டோ மாடல் பிரதமரும்

 K
arthikeyan Fastura
: கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும்போது இத்தாலி பிரதமர் கண்ணீர் விட்டு அழுதார். கொஞ்ச காலம் தான் பிறகு சுதாரித்துக்கொண்டு மடமடவென்று வேலையை பார்த்து கட்டுக்குள் கொண்டுவந்தார் ஐரோப்பிய நாடுகளின் பெண் பிரதமர்கள் பலகட்ட நடவடிக்கைகள் எடுத்து கட்டுக்குள் கொண்டுவந்து சாதித்தார்கள். கனடிய பிரதமர் தினமும் மக்களை எல்லா மீடியாக்கள் வழியாக சந்தித்து ஆறுதல் கொடுத்து, தேவையான நிதி உதவிகளை அறிவித்து, சிறுசிறு விஷயங்களிலும் கவனம் செலுத்தி வெற்றி கொண்டார். சீன பிரதமர் உறுதியான நடவடிக்கை எடுத்து மிக விரைவில் கட்டுப்படுத்தினர். மருந்து கண்டுபிடிக்க அனைத்து பல்கலைக்கழக ஆய்வாளர்களையும் ஒருங்கிணைத்து மருந்து கண்டுபிடிக்க வைத்து அதை 3ஆம் சோதனை கட்டத்திற்கு கொண்டுவந்தார்.

ரஷ்ய அதிபர் மருந்து கண்டுபிடித்ததாக அறிவித்து அதை புழக்கத்துக்கு கொண்டுவர உத்தவுமிட்டார்.

மடகாஸ்கர் பிரதமர் அலோபதிக்கு மாற்றாக இயற்கை மருத்துவத்தின் வழியே எதிர்த்து கட்டுப்படுத்தி காட்டியது மட்டுமல்லாமல் உலக சுகாதார நிறுவனத்திற்கே சவால் விட்டார்.

அமெரிக்க அதிபர் தினமும் உளறிக் கொட்டினார். கட்டுப்படுத்த முடியாமல் திணறினார். மக்களை கைவிட்டார். மக்களும் பத்திரிக்கைகளும் காறி உமிழ்ந்தார்கள்.

இந்திய பிரதமர் முதலில் கைதட்ட சொன்னார். மணி அடிக்க சொன்னார். விளக்கேற்ற சொன்னார். இன்று உச்சத்தில் இருக்கும்போது மாடலிங் செய்து கொண்டு வருகிறார்.
எல்லா மாநில முதலமைச்சர்களுக்கும்
ரோல் மாடல் -ஆக இருக்க வேண்டிய பிரதமர்
போட்டோ மாடல் - ஆக இருக்கிறார். 

கருத்துகள் இல்லை: