சனி, 9 செப்டம்பர், 2017

பாஜக - அதிமுக கூட்டணி?.. எடப்பாடி பழனிச்சாமி சூசக தகவல்!

mayura-akilan. Oneindia Tamil : காஞ்சிபுரம்: பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி உள்ளாட்சி தேர்தலின் போது முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மத்தியில் பாஜக அமைச்சரவையில் அதிமுக ஏற்கெனவே இடம் பெற்றிருந்ததை சுட்டிக் காட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதில் தவறு இல்லை என்றார். மேலும் வரும் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தான் அதிமுக வெற்றி பெறும் என்று சூலூர் தொகுதி அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை பாஜக தான் பின்னால் இருந்து இயக்குகிறது என எதிர் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். பாஜகவின் பினாமி ஆட்சிதான் தற்போது நடைபெறுகிறது என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என்று கூறி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு துணை முதல்வர் ஓபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என்று பதிவிட்டிருந்தார்.

சென்னை நந்தனத்தில் 10 ரூபாய் ஆவின் பால் அறிமுக விழாவில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, உள்ளாட்சி தேர்தலில் பாஜக உடன் அதிமுக கூட்டணி வைக்குமா என்பது தெரியாது. அதே நேரத்தல் பாஜக உடன் கூட்டணி வைப்பதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார்.
நாங்கள் ஏற்கனவே லோக்சபா தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டிருக்கிறோம். அதிமுக யாருடன் கூட்டணி வைக்கும் என்பதை முதல்வர் மற்றும் துணை முதல்வர் இணைந்து முடிவெடுப்பர். யாருடன் கூட்டணி வைத்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று கூறினார் ராஜேந்திர பாலாஜி.
பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி உள்ளாட்சி தேர்தலின் போது முடிவு எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரும்பாலான அதிமுக எம்.எல்.ஏக்கள் எங்களைத்தான் ஆதரிக்கின்றனர் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: