வியாழன், 7 செப்டம்பர், 2017

பாஸ்போர்ட் விதிமுறை திருத்தம்... பெற்றோருக்கு பதில் சாதுக்கள் சந்நியாசிகள் சட்ட பூர்வ பாதுகாப்பாளர் ஆகலாமாம்

இரவிக்குமார் : கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய பாஸ்போர்ட் விதிமுறைத் திருத்தம்

பாஸ்போர்ட் எடுப்பதற்காக புதிய விதிமுறைகள் பற்றி இன்று ஒரு மெயில் வந்திருந்து. அதைப் படித்துப் பார்க்கையில் கவனத்தைக் கவர்ந்தது இது. அரசின் மதம் சார்ந்த தன்மைகள் அதிகரித்துக் கொண்டே வருவதன் அறிகுறி இது. இதுவரை கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கேட்கும் விண்ணப்பத்தில் விண்ணப்பம் செய்பவரின் பெற்றோர்கள் பற்றிய விவரம் கட்டாயம் கேட்கப்பட்டிருக்கும். இப்போது, பெற்றோர் அல்லது சட்டபூர்வ பாதுகாப்பாளர் (கார்டியன்) பெயர் குறிப்பிடலாம் என்கிற கூடுதல் வசதி அளிக்கப்பட்டிருப்பது. இது வரைக்கும் பிரச்சனை இல்லை. அதனோடு, ஆன்மீகத் தலைவர்கள் (சாதுக்கள்/சந்நியாசிகள்) போன்றவர்களையும் தங்கள் பெற்றோருக்குப் பதில் குறிப்பிடலாமாம். அதிலும் ஆன்மீகத் தலைவர்கள் (சாதுக்கள்/சந்நியாசிகள்) என்று தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்கள். இதில் முல்லாக்கள், பாதிரியார்கள் என்று குறிப்பிடாமல் சாதுக்கள்-சந்நியாசிகள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நித்தியானந்தா, சமீபத்தில் கைதான பஞ்சாப் குர்மித் ராம் போன்ற தெள்ளவாரிகளின் மடங்களில் சிறுவர்கள், இளம்பெண்கள், ஆண்கள் என்று பலரும் ஆசைகாட்டி இழுத்துவரப்பட்டு, குடும்பங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, தங்கள் கூலிப்படைகளாக, அடிமை சேவகர்களாக வளர்க்கப்படுகிறார்கள். இவர்களை வைத்துப் பல தொழில்கள் இவர்களைப் போன்றவர்கள் செய்கிறார்கள். அந்நிய தேசங்களில் மடங்கள் அமைத்து, அங்கும் தங்கள் தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவு செய்கிறார்கள்.
அத்தகைய காவி தாதாக்களிடம் கள்ளக்கூட்டு வைத்துள்ள இந்த ஆர்எஸ்எஸ்-பாஜக அரசு அவர்களுக்கு அனுசரனையாகச் சத்தமில்லாமல் கொண்டு வந்த விதி மாறுதல்கள் இவை. இனி ஆன்மீகத்தின் பெயரால் அந்நிய நாட்டுக்கு ஆள்கடத்தல் செய்வது எளிது.
பெற்றோரின் இடத்தில் கார்டியன் என்கிற சட்டபூர்வக் காப்பாளரோடு ஆன்மீக குரு-தலைவரைச் செருகிச் சேர்ப்பது, அதிலும் கவனமாக சாதுக்கள்-சந்நியாசிகள் என்று மட்டும் தெளிவாக இந்துமதச் சார்போடு குறிப்பிடுவது ஆர்எஸ்எஸ்-பாஜக அரசின் சமூக வஞ்சகங்களில் ஒன்று.
கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய விதிமுறைத் திருத்தம் இது.
இதுதான் அந்த விதிமுறைத் திருத்த ஆங்கில வாசகம்-
-------------------------------------------------------------------
DETAILS OF PARENT/LEGAL GUARDIAN:
In a welcome move, the new passport rules has done away with the mandate requiring names of both parents at the time of application. An applicant now only needs to provide the name of either one of the parents or the legal guardian. This makes it easier for children with single parents or orphans to apply for a passport. Provisions have also been made for spiritually oriented people (Sadhus/Sanyasis) who can now mention the name of their spiritual leader instead of their biological parents.
Tnx: frm messenger Natarajan's post

கருத்துகள் இல்லை: