வியாழன், 7 செப்டம்பர், 2017

30 சதவீதத்தை விட்டு விட்டு, அரசுப்பள்ளி மாணவர்களில் 1%தான் என்கின்ற பொய். நீட் ஆதரவுப் பிரசாரம்

muthuram :NEET விஷயத்தில் அவர்களின் பிரச்சார உத்திகளைக் கையாள்வதில் நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது.
அரசு பள்ளிகளில் இருந்து வெறும் 1% மாணவர்களே மருத்துவம் பயில செல்கிறார்கள்னு சொன்னாங்க.
உண்மை என்னனு பாப்போம்.
தமிழக அரசு விண்ணப்பப் படிவத்தில்,
அரசு பள்ளி
அரசு உதவி பெறும் பள்ளி
கார்பரேஷன் பள்ளி
முனிசிபால்டி பள்ளி
பஞ்சாயத்து யூனியன் பள்ளி
கே.வி
சிபிஎஸ்சி பள்ளி
தனியார் பள்ளி
என்று வகை உள்ளது
இதில்
அரசு பள்ளி
அரசு உதவி பெறும் பள்ளி
கார்பரேஷன் பள்ளி
முனிசிபால்டி பள்ளி
பஞ்சாயத்து யூனியன் பள்ளி
என்று ஐந்து வகை பள்ளிகளிலும் படிப்பவர்கள் ஏழைகள் தான்.
ஆனால்
இதில் அரசு பள்ளியில் இருந்து வருபவர்கள் 1 சதம் அரசு உதவி பெறும் பள்ளி, கார்பரேஷன் பள்ளி, முனிசிபால்டி பள்ளி, பஞ்சாயத்து யூனியன் பள்ளி ஆகிய நான்கில் இருந்து வருபவர்கள் மிக மிக அதிகம்.
இந்த மிக மிக அதிக சதத்தை நயமாக மறைத்து விட்டு அரசு பள்ளி என்ற வார்த்தை விளையாட்ட மட்டும் வைத்துகொண்டு 1 சதம் என்று பொய் கூறுபவர் எவ்வளவு அறிவுடைய நபராக இருக்கவேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

உதாரணமாக தமிழகத்தில் மருத்துவமனைகளை
துணை சுகாதார நிலையம் HSC,
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் PHC, அரசு மருத்துவமனை GH
மாவட்ட தலைமை மருத்துவமனை DHQH,
மருத்துவக்கல்லூரி மருத்துவமனை MCH,
தனியார் மருத்துவமனை (Private Hospital) என்று பிரிக்கலாம்.
இதில்
அரசு மருத்துவமனை GHல் சிகிச்சை பெறுபவர்கள் மட்டும் தான் ஏழைகளா?
துணை சுகாதார நிலையம் HSC, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் PHC, மாவட்ட தலைமை மருத்துவமனை DHQH மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை MCH ஆகியவற்றில் பயிற்சி பெறுபவர்கள் எல்லாம் பணக்காரர்களா?
இதில் ஒன்று மட்டும் பெயரில் GH – அரசு மருத்துவமனை என்று உள்ளது என்பதை வைத்துக்கொண்டு, அதை மட்டும் கணக்கில் எடுக்க முடியுமா
முடியாதல்லவா? அதே போல்
ஏழைகள் மருத்துவ கல்லூரியில் சேர்வதை கணக்கில் எடுக்க அரசு உதவி பெறும் பள்ளி, கார்பரேஷன் பள்ளி, முனிசிபால்டி பள்ளி, பஞ்சாயத்து யூனியன் பள்ளி ஆகிய நான்கு வகை பள்ளிகளில் இருந்து வரும் 30 சதவீதத்தை விட்டு விட்டு, அரசு பள்ளி என்ற பெயருடன் இருக்கும் மிகச்சில பள்ளிகளில் இருந்து மட்டும் வரும் 1 சதவீதத்தை கணக்கு காட்டி நீட்டை ஆதரிப்பது எவ்வளவு பெரிய சமூக விரோத செயல்!<

கருத்துகள் இல்லை: