இந்த போராட்டத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, ’’நீட் தேர்வை நிச்சயம் அனுமதிக்க மாட்டேன் என்று அதனைக் கடுமையாக எதிர்த்தவர் ஜெயலலிதா. அதனால்தான் அவரின் நினைவிடத்தில் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம்.
ஆனால் காவல்துறையினர் எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிக்கின்றனர். ஆனால் நீட் தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு கிடைக்கும் வரையில் எங்களுடைய போராட்டம் தொடரும்’’ என்று தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளைப் பெண் போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதில் ஒரு மாணவி மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனால் மெரினாவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது .மாலைமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக