விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு விடுத்துள்ள வீரவணக்க செய்தி: ’’இந்துத்துவ கொலைகாரக்கும்பலால் ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தந்தை லங்கேஷ் அவர்களை போலவே சிறந்த முற்போக்களாராக, பெண்ணியவாதியாக செயல் பட்டு வந்த ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் பல முறை இந்துத்துவ வெறியர்களால் மிரட்டலுக்குள்ளான கவுரி , அஞ்சாமல் தொடர்ந்து தலித்துகளுக்கு ஆதரவாகவும், ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக பேசியும் எழுதியும் வந்துள்ளார். கடவுள் மறுப்பு கொள்கையோடு பெண்ணிய விடுதலைக்காக களமாடிய தோழர் கவுரி அவர்களை பல முறை கொல்ல முயற்சி செய்து தோல்வி அடைந்தனர்.
இப்போது தான் இந்துத்துவவாதிகள் தங்கள் கொலை வெறியை தணித்துள்ளனர். கொலைகாரக்கும்பலின் அச்சுறுத்தலுக்கு இந்திய சனநாயகம் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறது. அமைதியை சீர்குலைத்து வரும் இந்துத்துவக்கும்பலை கருநாடக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இந்துத்துவ கொலைகாரக் கும்பலை விடுதலை ச்சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறோம்! தோழருக்கு எமது வீரவணக்கம்!’’

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக