வெள்ளி, 8 செப்டம்பர், 2017

திருமாவளவன் திருச்சி பொதுகூட்டத்தில் : தடையை கண்டு தமிழர்கள் அஞ்சமாட்டோம்!

மாலைமலர் : நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்காததற்கு மத்திய அரசே காரணம் என்றார். நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்காததற்கு மத்திய அரசே காரணம் - திருமாவளவன் பேச்சு திருச்சி: நீட் தேர்வுக்கு எதிரான பொதுக்கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்ததையும் மீறி, இன்று திருச்சியில் எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:- தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதிப்படையாத வகையில் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்றுதான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பா.ஜ.க. புகார் அளித்ததால் தான் இந்த கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தை அ.தி.மு.க. ஆள்கிறதா? இல்லை மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆள்கிறாதா? என்பது தெளிவாக தெரிகிறது. பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது என நீதிமன்றம் சொல்லவில்லை. பொதுக்கூட்டம் என்பது போராட்ட வடிவம் இல்லை. கல்வியை மத்திய அரசு பட்டியலில் இருந்து மாநில அரசு பட்டியலில் சேர்க்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.


இது நீதிமன்ற அவமதிப்பு ஆகாது. இந்த பொதுக்கூட்டம் போராட்டத்தை அறிவிப்பதற்கான ஒரு கூட்டம். நீட் தேர்விற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அனிதாவின் குடும்பத்திற்கு தெரியாது, உச்சநீதிமன்றம் ஏழை எளியோருக்கான நீதி அளிக்கும் மன்றம் அல்ல என்பது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்காதாதற்கு மத்திய அரசே காரணம். இந்த பிரச்சனையில் மத்திய அரசு மீது குறைகூறும் தைரியம் கூட தமிழக முதல்வருக்கு இல்லை.

கல்வி என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். நாடு முழுவதும் ஒரே கல்வித்திட்டம் பின்பற்றப்படவில்லை. இந்த பிரச்சனையில் உச்சநீதிமன்றம் மீது குற்றம் கூற முடியாது. இந்தியா முழுவதும் ஒரே கல்வி, ஒரே பாடத்திட்டம் என மொத்த இந்தியாவையும் தன் காலடிக்குள் கொண்டு வர முயற்சிக்கும் மத்திய மோடி அரசையே குறைகூறவேண்டும். கல்வித்தரத்தை உயர்த்தவேண்டும் என்றால் அதன் கட்டமைப்பை முதலில் உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை: