கீற்று : கணியூர் தமிழ்ச்செல்வன் : ஆரியர் வருகை என்ற சொல்லை
நம்மில் பெரும்பாலானவர்கள் பாடப்புத்தகத்திலும், திராவிடர்
இயக்கமேடைகளிலும், ஏடுகளிலும் கேட்டறிந்திருப்போம். எனக்கும் இந்தச்சொல்
அப்படித்தான் அறிமுகமானது. கிட்டத்தட்ஏழாவது படிக்கும்போது ஆரியர் வருகை
என்ற தலைப்பில் சமூக அறிவியல் பாடத்தில் ஒரு கட்டுரை இருந்தது.
அதில்
ஆரியர்களின் பூர்வீகஉணவு என்று மாமிசத்தைக் குறிப்பிட்டிருந்தார்கள்.
எனக்கு ஒரு மிகப்பெரிய சந்தேகம் வந்தது. அதற்குக் காரணம் எங்கள்ஊரில்
திராவிடர்கழகத் தோழர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். அவர்களின் மூலமாக
ஆரியர் என்றால் பார்ப்பனர்களைக் குறிக்கும் என்று அறிந்திருந்தேன். ஆனால்
எனக்கு மிக நன்றாகத் தெரியும் பார்ப்பனர்கள் மாமிசம் உண்ணமாட்டார்கள்
என்று. அன்றுமாலையே என்னுடையஅப்பாவிடம்கேட்டேன்.
நான் : அப்பா, ஆரியர் என்றால் பார்ப்பனர்கள் தானே?
அப்பா : ஆம் அவர்கள்தான்.
நான்: ஆனால் என்னுடைய பாடப்புத்தகத்தில் ஆரியர்களின் பூர்வீகஉணவு மாமிசம் என்று போட்டிருக்குது? அதுசரியா? தவறா?
அப்பா: அதுசரிதான், அவர்கள் ஆடு, மாமேய்த்துக்கொண்இந்தியாவுக்கு வரும்போது அதைத்தான் உண்டார்கள். பிறகு மாறிவிட்டார்கள்.
பிறகு இந்தச் சிந்தனை வளர்ந்து கொண்டே இருந்தது. அதற்கு இரண்காரணங்கள்.
1.
எங்கள் ஊரில் பெரிய அக்ரஹாரம் ஒன்று இருந்தது. குறிப்பாகச் சொல்ல
வேண்டுமானால் எங்கள் மாவட்டத்திலேயே சொல்லிக்கொள்ளும் அளவுக்குப்
பெரியது.
2. திராவிடர்கழகத் தோழர்களின் பிரச்சாரம்
நாளுக்குநாள்
நான் அவர்களின் உருவம், பழக்கவழக்கங்கள், கல்விஅறிவு, சமுதாயஅந்தஸ்து
ஆகிவற்றைச் சற்று உற்றுநோக்க ஆரம்பித்தேன். அதில் எனக்கு
முதலாவதாகப்பட்டது அவர்களின் உருவம்தான். அதாவது சுமார் பத்தாயிரம்பேர்
இருக்கக்கூடிய ஊரில் சிலநூறு பேராக இருக்கக்கூடிய பார்ப்பனர்கள்
சற்றுவித்தியாசமாக இருந்தார்கள். அதில் முக்கியமாக
1.
அவர்களில் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் வெள்ளை நிறத்துடன்
இருந்தார்கள். ஆனால் இதுவே பார்ப்பனரல்லாத மக்களில் 5 சதவிகிதத்துக்கும்
குறைவானவர்ளே சற்று வெள்ளை நிறத்துடன் இருந்தார்கள்.
2.
பெரும்பாலான பார்ப்பனர்கள் நல்ல உயரத்துடன் சுமார் ஆறுஅடி வரை
இருந்தார்கள். ஆனால் இதுவே பார்ப்பனரல்லாத மக்களில் குறைவான நபர்களே
ஆறுஅடிக்கு அருகில் இருந்தார்கள்.
அதற்குஅடுத்தபடியாக,
வடஇந்தியர்களைப் பற்றிய பார்வையில், சிறுவயதில் வடஇந்தியர்கள் எல்லோருமே
சிவப்பாகவும் மற்றும் நல்ல உயரத்துடனும் இருப்பார்கள் என்று
நினைத்திருந்தேன். ஆனால், நான் சில ஆண்டுகள் வமற்றும் மேற்கு இந்தியாவில்
தங்கியிருந்த போதுதான் தெரிந்தது தென்இந்தியா அல்லாத பகுதிகளில் வாழ்கிற
மக்களிலும் அதிகமான நபர்கள் குறிப்பாகப் பிற்படுத்தப் பட்ட-
தாழ்த்தப்பட்மக்கள் நம்மைப் போலவே சற்று கறுத்த மற்றும் நடுத்தரஉயரம்
உடையவர் களாக இருக்கிறர்கள் என்று அறிந்தேன்.
(ஒப்பீட்டுஅளவில்
இது தென்இந்திய மக்களுடன் சற்றுக்குறைவு) தமிழ்நாடுஅல்லாத பகுதிகளில்
வாழும் மக்கள் தங்களின் பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரை இன்னும்
பயன்படுத்து வதால் எனக்கு அவர்களின் வர்ணநிலையை அறிந்துகொள்வது சற்று
எளிதாக இருந்தது.
ஆனால்,
இதுவே வடஇந்திய உயர்சாதியினர்களில் பெரும்பான்மையினர், பார்ப்பனர்கள்,
ஜாட், ராஜ்தூத், அகர்வால் போன்ற ஜாதியினர் சிவப்பு நிறத்துடனும்
உயரமாகவும் இருந்தார்கள். தமிழ்நாட்டில் வாழும் பார்ப்பன உயர்சாதியினர்
வெறும் 5 சதவிகிதம், ஆனால் ஒருசில வடமேற்கு இந்திய மாநிலங்களில் 20 – முதல்
35 சதம் வரை உயர்சாதியினர் உள்ளார்கள்.
அவர்கள்தான்
அங்கு அனைத்துத்துறைகளிலும் (சினிமா, ஊடகம், அரசியல்) சுமார் 98 சதவிகிதம்
ஆக்கிரமித்து உள்ளார்கள். ஆகையால்தான் நான் அப்படி சிறுவயதில் உணர்ந்தேன்
என்று புரிந்து கொண்டேன்.
கால்டுவெல்லின் மொழிஆராய்ச்சி, ஹரப்பா - முஹஞ்சதாரோஆய்வுகள்
நான்
மேலே குறிப்பட்கருத்தியலை என்னுடைய கல்லூரிக் காலங்களில் அறிந்த
கால்டுவெல்லின் மொழி ஆராய்ச்சி, ஹரப்பா - முஹஞ்சதாரோ ஆய்வுகளுடன்
ஒப்பிட்டுக் கொண்டேன். அதாவது 18 ஆம் நூற்றாண்டில் மேலைநாட்மொழியியல்
அறிஞர்கள் கால்டுவெல் - எல்லீஸ் இருவரும் இந்தியமொழிகளை ஆராய்ந்து தமிழ்
உள்பதென்னிந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியவை
அல்ல. இவை அனைத்தும் சமஸ்கிருதத்தில் (இந்தோ-ஐரோப்பிய) இருந்து
முற்றிலும் வேறுபட்டுத் தனித்தன்மையான ஒரு மூல (திராவிட) மொழியில்
தோன்றியவை என்று தங்களின் ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்தார்கள்.
அதற்கு
அடுத்தபடியாக ஹரப்பா - முஹஞ்சதாரோ பகுதிகளை ஆராய்ந்த மேலைநாட்தொல்லியல்
ஆய்வாளர்கள் இந்தப்பகுதிகளில் சிலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு (சுமார்
மூவாயிரம் ஆண்டு) இங்கு வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் என்றும்,
சிந்துச்சமவெளி நாகரீகம் என்பதே திராவிநாகரீகம் தான் என்றும் தங்களுடைய
ஆய்வில் கூறினார்கள். ஹரப்பா - முஹஞ்சதாரோ போன்ற பகுதிகள் தற்போது
முறையே குஜராத் - பாகிஸ்தானில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரியர் இடப்பெயர்வு பற்றிய விவாதத்தைத் தீர்மானிக்கும் மரபணு
2017
ஜூன் 17 அன்று இந்து ஆங்கில நாளேட்டில் டோனி ஜோசப் அவர்களால் எழுதப்பட்ட
How Genetics is settling the Aryan migration debate என்ற கட்டுரை எனது
கவனத்தை ஈர்த்தது. இந்தக் கட்டுரையைப் படித்த பொழுது ஆரியர் வருகை பற்றி
மேலும் பல அரிய தகவல்களை நாம் அறிந்து கொள்ள ஏதுவாக இருந்தது.
இந்தக்
கட்டுரையானது மார்ச் மாதம் பேராசிரியர் மார்டின் ரிச்சர்ட் அவர்களின்
தலைமையில் பதினாறு மரபணு அறிவியல் ஆய்வாளர்கள் தங்களுடைய ஆய்வுகளை “A
genetic chronology for the Indian Subcontinent points to heavily
sex-biased dispersals” (இந்தியத் துணைக்கண்டத்திற்கான ஒரு மரபியல்
காலவரிசை, பாலியல் சார்புடைய பரவலைச் சுட்டிக்காட்டுகிறது) என்ற தலைப்பில்
BMC Evolutionary Biology என்கிற பரிணாம உயிரியல் சார்ந்த இதழில் வெளிவந்த
ஆய்வுகளைப் பற்றியதாக இருந்தது. அந்த ஆய்வு பற்றிய கட்டுரையை சற்று
விரிவாக பார்போம்.
(குறிப்பு
: ஆய்வாளர்கள் இந்த ஆய்வுக்காக சுமார் பதினாராயிரம் நபர்களுடைய மரபணுவை
எடுத்து உள்ளார்கள், மேலும் அதில் இந்தியாவின் பல பகுதி மக்களும்
அடங்குவர்.)
ஆரியர் வருகை என்பது உண்மைதானா?
ஆம்
. ஆரியர்கள் சுமார் கிமு 1500 முதல் கிமு 2000 ஆண்டுகளில் மத்திய கிழக்கு
ஆசியாவில் இருந்து இந்தியாவில் குடியேறி இருக்கலாம் என்கிறது இந்த ஆய்வு.
அதாவது இந்தியாவில் உள்ள சுமார் 17 சதம் ஆண்களிடம் ஐரோப்பிய (ஆரிய)
மக்களின் மரபணு உள்ளது .
அது என்ன குறிப்பாக ஆண் மரபணு(Y-DNA , transmitted only from father to son) ?
ஏனென்றால்
பொதுவாக மரபணு ஆராய்ச்சி என்றால் பெண் மரபணுவை ((mt DNA) தான் அதிகம்
எடுத்துக்கொள்வார்கள். அதன்படி இங்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு
இந்தியாவில் உள்ள பெண் மரபணுவை (mtDNA - materilineaDNA, transmitted only
from mother to daughter) ஆராய்ந்ததில் சுமார் கடைசி பனிரெண்டாயிரம்
ஆண்டுகள் குறிப்பிடத்தகுந்த அளவு எந்த ஒரு குடியேற்றம் / இனக் கலப்பு
எதுவும் நடைபெறவில்லை என்றே ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.
பிறகு
ரிச்சர்ட் தலைமையிலான குழு இந்தியாவில் உள்ள ஆண் மரபணுவை ஆராய்ந்த
போதுதான் 17 சதம் இந்திய ஆண்களிடம் R1a haplogroup எனப்படும் ஐரோப்பிய
மரபணு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மேல்சொன்ன கால இடைவெளியில்(4000
years ago or bronze age) இந்தியாவிற்கு வந்த ஆரியர்களில் மிகப்
பெரும்பான்மையாக ஆண்களே இருந்தார்கள் என்பதாகும்.
R1 என்றால் என்ன ?
Pontic
Caspian Steppe எனப்படும் பகுதியில் வாழ்ந்த மக்களிடம் இருந்து தோன்றிய
ஆண் மரபணுவின் (Y-DNA) பெயர். Pontic Caspian Steppe எனப்படும் இந்தப்
பகுதியானது கருங்கடலுக்கு வடக்கேயும், காஸ்பியன் கடலுக்குக் கிழக்கேயும்,
மேற்கு உக்ரேனில் இருந்து, தற்போதைய ரஷ்யாவில் உள்ள வோல்கா பெடரல்
மாவட்டம் வரை உள்ள புல்வெளிப் பகுதியாகும். அதாவது R1a என்பது ஆரிய
மூதாதையர்களின் ஆண் மரபணுவின் பெயர் என்றும் சொல்லலாம்.
R1a haplogroup என்றால் என்ன?
A
haplogroup is a genetic population group of people who share a common
ancestor on the patriline or the matriline, haplogroup என்பது ஒரு
பொதுவான ஆண்அல்லது பெண் மூதாதையர்களின் மரபணுவை பகிர்ந்துகொள்கிற ஒரு
மரபணு மக்கள் குழுமம் ஆகும். இதன்படி R1a haplogroup என்பது R1a என்ற ஆண்
மூதாதையர்களின் மரபணுவைப் பகிர்ந்துகொள்கிற மரபணு மக்கள் குழுமம். அதாவது
ஆரிய ஆண் மூதாதையர்களின் மரபணுவைப் பகிர்ந்து கொள்கிற மக்கள் குழுமம்.
உலகம்
முழுவதிலும் செய்த மரபணு ஆராய்ச்சிபடி, இந்த R1a haplogroup, pontic
caspian steppe எனப்படும் பகுதியில் இருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பு தொடர்ச்சியாக, கிழக்கு, வடக்கு, தெற்கு என பல பகுதிகளுக்குப்
பரவியுள்ளது. தற்போது இந்த மரபணுவானது ஐரோப்பா, மத்திய ஆசிய மற்றும்
கிழக்காசிய நாடுகளில் பரவலாக உள்ளது.
R1a haplogroup ன் பிரிவுகள்
மூன்று
வருடங்களுக்கு முன்பு டாக்டர் பீட்டர் அண்டர்ஹில் (Pete r A Underhill,
Stanford University, Stanford , Department of Genetics, US)
தலைமையிலானமுப்பத்தியிரண் ஆராய்ச்சியாளர்களைக் கொண்குழு, ஆசிய ஐரோப்பியக்
கண்டத்தில் 126 பகுதிகளில் உள்ள பதினாறாயிரம் ஆண்களின் மரபணுக்களைச்
சோதித்து, சு1ய மரபணுவின் பரவல் மற்றும் தொடர்பு பற்றிய ஆய்வு
அறிக்கையைச் சமர்ப்பித்தது (distribution and linkages of R1a) .
அதில்R1a
haplogroup ன் இரண்பிரிவுகளாக Z 282 and Z 93 என்கிற துணை haplogroup
ஐக் கண்டறிந்தார்கள். அதில் Z 282 என்கிற துணை haplogroup (
sub-haplogroup)ஐரோப்பாவில் உள்ள மக்களிடம் மட்டும் உள்ளதென்றும்,
அதற்குஅடுத்தபடியாக உள்ள Z 93 என்ற துணை haplogroup ( sub-haplogroup)
மத்திய மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் மக்களில் உள்ளது என்றும்
கண்டறிந் தார்கள். மேலும் Z 93 ன் முக்கிய மூன்று பிரிவுகள் முறையே
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்திய மற்றும் இமாலயப் பகுதிகளில் உள்ள
மக்களிடம் உள்ளதென்றும் கூறினார்கள். ஆகையால் இந்தியாவில் உள்ள ஆரியர்களின்
மரபணு Z 93 என்ற Sub-Haplogroup ஐ சார்ந்தது.
ஆரியர் ஆக்கிரமிப்பும் - சிந்துச்சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சியும்
ஆரியர்
வருகையும் சிந்துச் சமவெளி நாகரீகத்தின் வீழ்ச்சியும் கிட்டத் தட்ஒரே கால
கட்டத்தில் நடந்தனவா? ஆம் என்கிறது அறிவியல் ஆய்வுகள். இங்கு நாம்
இரண்நிகழ்வுகளையும் இரு வேறு விதமான அறிவியல் ஆய்வுகளில் இருந்து அறியலாம்
1.
சிந்துச் சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி என்பது தொல்லியல் துறையின்
ஆய்வுகளின் அடிப்படையில் குறிப்பாக ஹரப்பா முஹன்ஜதரா ஆய்வுகளில் சுமார்
நான்காயிரம் ஆண்டுகளுக்கு (Bநவறநநே 1900 யனே 1700 Bஊ) முன்பு அதன் அழிவு
தொடங்கிற்று என்று அறியப்படுகிறது. அதாவது சிந்துச் சமவெளி நாகரிகத்தின்
சிறப்புகளில் ஒன்றான நகர்ப்புற வாழ்வு அழிந்து, அங்கு வாழ்ந்த மக்கள் கிராம
/ நாட்டுப்புறப் பகுதிகளைநோக்கிஇடம்பெயர்ந்தார்கள்(னந-ரசயெைேணயவடிைே)
2.
தோராயமாக Z 93 என்ற மரபணு வகை எப்போது தனக்குள்ளேயே சில பிளவுகளை
உருவாக்கிக் கொண்டதோ - அப்போதுதான் ஆரியர்களின் வருகை சிந்துச் சமவெளி
பகுதிகளில் நடந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில்
பார்த்தால் அந்த நிகழ்வு சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்குமுன்பு என்று மரபணு
ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த
இரண்வகை அறிவியல் ஆய்வுகளின்படி ஆரியர் வருகையும் சிந்துச் சமவெளி
நாகரீகத்தின் வீழ்ச்சியும் கிட்டத்தட்ஒரேகால கட்டத்தில்தான் நடந்துள்ளது
என்ற முடிவை அறிவியல் உலகம் சுட்டிக்காட்டுகிறது.
குறிப்பு:
இங்குகவனிக்கப்பவேண்டியது என்னவென்றால் ஆரியர் வருகையால்தான் சிந்துச்
சமவெளி அழிந்தது என்றோ அல்லது ஆரியர்கள்தான் சிந்துச் சமவெளி நாகரீகத்தைச்
சண்டையிட்அழித்தார்கள் என்பதற்கான எந்த ஒரு அறிவியல் முகாந்திரம் எதுவும்
இப்போது வரை கிடைக்கவில்லை.
ஆரியர் ஆக்கிரமிப்பால் வந்த கேடுகள்
உலகில்
மனித இனத்தின் இடப்பெயர்வு என்பது தொடர்ந்து நடந்துகொண்இேருக்கின்ற
ஒன்று. ஆகையால், வரலாற்றில் எந்த ஒரு இனமும் நூறு சதவீதம் சிறு கலப்பு
கூஇல்லாமல் எந்த ஒரு நா/ பகுதி முழுவதும் வாழ்வது என்பது சாத்தியமற்றதாக
உள்ளது.
அதேபோல்தான்
இந்தியாவிலும் ஆரியர் அல்லாத பல மனித இனக்குழுக்கள் வருகை புரிந்துள்ளனர்.
உதாரணமாக, சுமார் 55,000 முதல் 65,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில்
இருந்து வந்தவர்கள் தான் பெரும்பான்மையான இந்திய மக்களின் மூதாதையர்கள்
ஆவர்.
அதன் பிறகு சுமார்
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு (இந்த கால அளவு இன்னும் சரியாக உறுதிப்
படுத்தப்படவில்லை) முன்பு மேற்கு ஆசியாவில் இருந்து குடியேறிய மக்கள்
ஏற்கனவே இங்குள்ள மக்களிடம் கலந்து பல விவசாய யுத்திகளை அறிமுகப்படுத்தி
உள்ளார்கள். அதன் பிறகு வணிகம் சார்ந்தும் மற்ற பலவற்றிற்காகவும் பல
இனக்குழுக்கள் வந்துள்ளார்கள்.
ஆனால்,
நம்மால் மற்ற இனக்குழுக்களின் வருகையைப் போல் ஆரியர் வருகையைப்
பார்க்கமுடியாது. அதற்குக்காரணம் ஆரியர்கள் சமஸ்கிருதம் என்ற மொழியுடம்
அன்றைய சிந்துச் சமவெளி மக்களுக்கு முற்றிலும் மாறுபட்பிறவி ஏற்றத்தாழ்வு
கொண்ஒரு புது வகையிலான வாழ்க்கைமுறையைப் புகுத்தி உள்ளார்கள்.
ஆம்,
ஆரியர்கள் இந்தியத் துணைக்கண்டத்திற்கு வரவில்லையென்றால் இந்தியாவில் சாதி
என்பதே இருந்திருக்காது என்று ஆய்வுகள் நமக்கு புரியவைக்கிறது. குறிப்பாக
ஆரியர் வருகை புரிந்த காலமும் ‘ரிக் வேதம்’ தோன்றிய காலமும் கிட்டத்தட்ட
ஒரே காலமாகும். ஆரியர்கள் வந்திருக்கா விட்டால், இந்தியாவும் மற்ற
நாடுகளைப்போல் சாதி என்ற பிறவி ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லாத நாடாக
இருந்திருக்கும்.
பார்ப்பனர் எதிர்ப்பு சரியா?
இன்றுவரை பலர் திராவிடர் இயக்கத்தின் மேல் வைக்கும் குற்றச்சாட்- பார்ப்பனர்களை எதிர்ப்பது பற்றி, அதாவது.
இந்தியாவில்
எல்லோரும்தான் சாதி பார்க்கிறார்கள். ஆனால் நீங்கள் ஏன் சாதி ஒழிப்பு,
சமத்துவம், பகுத்தறிவு பற்றிய பரப்புரைகளில் குறிப்பாக பார்ப்பனர்களை
மட்டும் அதிகமாகத் தனிமைப்படுத்திப் பிரச்சாரம் செய்கிறீர்கள்?
ஆம்.
உண்மைதான். திராவிடர் இயக்கம் தான் இந்தியத்துணைக்கண்டத்தில் கடந்த ஒரு
நூற்றாண்காலமாக மற்ற இயக்கங்களைவிபார்பனர்களை மிகக் கடுமையாக விமர்சனம்
செய்து கொண்டிருக்கிறது . அதற்குக்காரணம் ஆரியப்பார்ப்பனர்களின்
ஆதிக்கத்திலிருந்து பார்ப்பனர் அல்லாத திராவிமக்களை மீட்டெடுப்பதுதான்.
அதாவது,
இன்றுவரை பெரும்பான்மையான பார்ப்பனர்கள் தங்களை ‘இந்து’ என்றோ,
தமிழர்/தெலுங்கர் / மலையாளி / வங்காளி என்று உணர்வதைவிட, தங்களை ‘ஆரியர்’
என்றுதான் உணர்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை அனைத்துப்
பார்ப்பனர்களும் தங்களைவெளிப்படையாகவே ‘ஆரியர்’ என்றுதான் அடையாளப்படுத்தி
கொண்டார்கள்.
பிறகுதான்,
மாறிவரும் சூழலுக்கு ஏற்றபடி, தங்களையும் ‘இந்து’ என்று அடையாளப்படுத்திக்
கொண்டிருக்கிறார்கள். அதேபோல் அவர்கள் எந்த மாநிலத்தில் வாழ்ந்தாலும்,
எந்த ஒரு மொழி பேசினாலும் இந்தோ ஐரோப்பிய மொழியான - ஆரியர்களின்
மொழியான சமஸ்கிருதத்தை மட்டுமே தங்களின் தாய் மொழியாக மனதார
ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
அதன்
காரணமாகவே மக்கள் பயன்பாட்டில் இல்லாத மொழியான சமஸ்கிருதத்தைத் தெய்வ
பாசை, அறிவியில் மொழி என்றெல்லாம் முட்டுக்கொடுத்துக்
கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவாகவே இந்தியாவில் உள்ள திராவிமொழிகளில்
கூதங்களின் சமஸ்கிருதத்தைத் தங்களால் முடிந்த அளவு பல நூற்றாண்காலமாகத்
திணித்துள்ளார்கள். உதாராணமாக, இந்தியாவின் முதல் செயற்கைக்கோளுக்கு
‘ஆரியப்பட்டா’ என்று தங்களின் இனப்பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்கள்.
பார்ப்பன
எதிப்பு இல்லாமல் இந்தியத் துணைக்கண்டத்தில் எந்த ஒரு சமத்துவ சமுதாய
அல்லது சமுதாய மறுமலர்ச்சி சாத்தியமில்லை. அதற்கு உதாரணம். கிட்டத்தட்அரை
நுற்றாண்காலத்தில் கறுப்பின விடுதலை என்பது அமெரிக்காவில் சாத்தியமாயிற்று.
அதற்கு முக்கியக்காரணம் கறுப்பின மக்களின் போராட்டம் மட்டுமில்லாமல்
அங்குள்ள வெள்ளை நிற மக்களில் பெரும்பான்மையினர் நிற அடிப்படையில்
மனிதர்களிடம் பாகுபாபார்ப்பது தவறு என்று உணர்ந்ததும்தான்.
ஆனால்
இங்கு நடப்பது வேறு. தோழர் பெரியார் அவர்கள் கூறுவது போல, இன்றுவரை ஊரு
ஊருக்கு இருக்கும் பார்ப்பனர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு
பெரிய சமுதாய மாற்றம் நிகழாமல், தங்களின் ஆதிக்கம் குறையாதபடி
பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இறுதியாக,
இந்த கட்டுரையின் நோக்கம் எந்த ஒரு மனித இனத்தையும் இரத்தப் பரிசோதனை
அடிப்படையில் பிரித்துக் காட்டுவது அல்ல. மாறாக பார்ப்பனர் அல்லாத
திராவிமக்களிடம் ஐரோப்பாவில் இருந்து, மத்திய ஆசியா - கைபர் போலன் கணவாய்
வழியாக வந்த ஆரியக் கூட்டம்தான் நம்மில் பிறவி ஏற்றத்தாழ்வான சாதியைத்
திணித்து, தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி உள்ளார்கள் என்பதை
உணர்த்துவதுதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக