சனி, 9 செப்டம்பர், 2017

ஒரே வருட RSS பினாமி ஆட்சி எங்கள் குழந்தைகளை தெருவில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது! .


Sivasankaran.Saravanan   :  பள்ளி மாணவிகளின் நீட் எதிர்ப்பு சாலை மறியல் போராட்டத்தை கண்டதிலிருந்து என் மனம் அமைதியிழந்து தவிக்கிறது. இதில் நாம் பெருமைப்பட ஏதுமில்லை. நம்முடைய கையாளாகத்தனம் தான் பல்லிளிக்கிறது.
காமராஜர் சோறு போட்டு பள்ளிக்கு வரவழைத்தார் . புரட்சித்தலைவர் எம்ஜியார் அதை சத்துணவாக விரிவுபடுத்தினார். டாக்டர் கலைஞர் காலணி, பஸ் பாஸ், மிதிவண்டி வழங்கினார். புரட்சித்தலைவி அம்மா எங்கள் குழந்தைகள் கையில் லேப்டாப்பை கொடுத்தார். இப்படி தமிழ்நாட்டுக்கென தனி பாரம்பரியம் உள்ளது.
ஒரே வருட ஆர்எஸ்எஸ் கொல்லைப்புற ஆட்சியில் எங்கள் குழந்தைகளை தெருவிற்கு கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்கள். எடுபிடி அதிமுக ஆட்சியாளர்களுக்கு துளியேனும் மனசாட்சி இருந்தால் இந்த அடிமை ஆட்சியை தூக்கியெறியவேண்டும். ஏழை எளிய ஆட்கள் தான் இரட்டைஇலையின் பலத்திற்கு காரணம். அந்த மக்களை வதைத்துத்தான் பாஜகவிற்கு அடிமை சேவகம் செய்வோம் என்றால் எந்த காலத்திலும் உங்கள் பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது.

கருத்துகள் இல்லை: