புதன், 6 செப்டம்பர், 2017

நிர்மலா சீதாராமன் .. ஒரு மோசமான உதாரணம் .. அவா எந்த தகுதியும் இல்லாமேலே உச்சத்துக்கு போகமுடியும்!


எம். குணவதி : பணம் கொழுத்த குடும்பத்திலிருந்து வந்த ஐயங்கார் பெண்ணான நிர்மலா சீதாராமன், நாட்டின் இரண்டாவது பெண் பாதுகாப்பு அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என ஊடகங்களும், நாளிதழ்களும் கொண்டாடுகின்றன.
ஜே.என்.யூவில் பொருளாதாரம் படித்திருக்கிறார். நல்லது. நிர்மலாவுக்கு யாருடைய பொருளாதார, வர்க்க நிலையைக் குறித்தெல்லாம் கவலை?
பொய் நம்பிக்கை கொடுத்து, அனிதாவை தற்கொலைக்குத் தூண்டிவிட்டு கொன்றிருக்கும் ஆர்.எஸ்.எஸ் பாஜக அரசு, நிர்மலா சீதாராமனைப் புகழ்ந்து கெளரவித்து பதவி வழங்குகிறது. சில ஊடகங்களும், பத்திரிகைகளும் சிலாகித்து தீர்க்கின்றன.
வழக்கம்போல நிர்மலா கொண்டாடப்பட வேண்டியவர்தானே? அவரும் பெண்தானே? என்றெல்லாம் பயங்கரமாக கம்பு சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் சிலர்.

கோரக்பூரில் ஆதித்யநாத் அரசு காவு வாங்கிய குழந்தைகளின் தாய்மார்கள், சத்துக் குறைப்பாட்டின் காரணமாக, பசிப் பட்டினியால் இறக்கும் பெண்கள், அனிதாக்களின் அம்மாக்கள், எல்லா விதத்திலும் சுரண்டலுக்கு உள்ளாகும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் இவர்களெல்லாம் பெண்கள் கிடையாதா?
பல வாய்ப்புகளை கையில் வைத்துக்கொண்டு, எந்த துறையிலும் “ஏ” கிளாஸ் Influence வைத்திருக்கும் ஏய்த்து பிழைத்தவர்களை, அடித்தட்டு பெண்களுக்கு முன்னுதாரணமாக வைக்கும் ”ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே” மொக்கை Inspirational Quotes வேலையை செய்வதற்கு எதற்கு ஃபெமினிஸ்ட் வேடம்??
இந்தியாவின் முதல் பெண் பிரதமர், முதல் பெண் மருத்துவர், முதல், இரண்டாவது… போன்ற சாதனைப் பட்டியல்களில் நிர்மலாக்கள் நிரம்பி வழிவதும், பட்டியல் சாதி, பழங்குடிப் பெண்கள் இல்லாமல் இருப்பது தற்செயலானதா?
பொத்தாம் பொதுவாக பெண் முன்னேற்றத்தை பத்தி பத்தியாக எழுதுகிறீர்களே.. நிர்மலா சீதாராமன்களும், ஸ்மிரிதி இரானிகளும் யாருக்கானவர்கள்? முன்னேறிக்கொண்டே போய், யாருக்கு சேவை செய்வதற்கு இந்த ஏமாற்று வேலை?
எம். குணவதி, ஊடகவியலாளர்.  thetimestamil.com

கருத்துகள் இல்லை: