புதன், 6 செப்டம்பர், 2017

நீட் போராட்டத்தில் பெண் போலீசிடம் சில்மிஷம் செய்த உயர் அதிகாரி.!


நீட் தேர்வால் தனது மருத்துவ கனவு தகர்ந்ததால் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுதியுள்ளது. இதனால் தமிழக முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில் தற்போது நீட் போரட்டம் சம்மந்தமான விடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டிக்கொண்டிருந்த போது, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீசார் அதிகாரிகள் முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறபடுத்துவதில் ஆண் மற்றும் பெண் போலிஸ் ஆகிய இருவரும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த உயர் அதிகாரி போலிஸ் அதிகாரி ஒருவர் அருகில் நிற்கும் பெண் போலீஸ் அதிகாரியின் உடலில் கை வைத்து தள்ளிவிடும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது . இந்த சம்பவம் காரண அந்த அதிகாரியிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. லைவ்டே

கருத்துகள் இல்லை: