வியாழன், 7 செப்டம்பர், 2017

சமூக வலைதள தகவல் பரிமாற்றத்தை வேவு பார்க்க கமிட்டி...மத்திய அரசு அறிவிப்பு

புதுடில்லி: வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற, சமூக வலைதளங்களில், தகவல்கள் பரிமாற்றத்தை முறைப்படுத்துவது பற்றி ஆலோசிக்க, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான கமிட்டி, அமைக்கப்பட்டுள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்திய அரசியல் சட்டத்தின்படி, தனிநபர் ரகசியம், அடிப்படை உரிமையே' என, ஆதார் வழக்கில், உச்ச நீதிமன்றத்தின், ஒன்பது நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, சமீபத்தில், தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், வாட்ஸ் ஆப், பேஸ் புக் போன்ற, சமூக வலைதளங்களில் பரிமாறப்படும் தகவல்களை பாதுகாப்பது குறித்து, தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்த தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது கமிட்டி:அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா கூறியதாவது:
சமூக வலைதளங்களில் பரிமாறப்படும் தகவல்களை முறைப்படுத்துவது பற்றி ஆய்வு செய்து, ஆலோசனைகள் வழங்க, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, பி.என்.கிருஷ்ணா தலைமையிலான கமிட்டி, அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி, வழங்கும் பரிந்துரை தினமலர்

கருத்துகள் இல்லை: