
வரும் 7-ம் தேதிவரை மியான்மரில் தங்கும் பிரதமர் மோடி, மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி-யை நாளை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியாவில் உரிய அனுமதியின்றி தங்கியிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பாக இருவரும் ஆலோசிப்பார்கள் என தெரிகிறது.
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாகான் பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆனந்தா ஆலயம் மற்றும் பல பகோடாக்கள் சேதம் அடைந்தன. சேதமடைந்த ஆனந்தா ஆலயத்தை புணரமைப்பு செய்யும் பணிகளில் இந்திய தொல்லியல் துறை ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் உதவியுடன் மியான்மரில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக அவர் கேட்டறிகிறார். மேலும், இந்திய வம்சாவளி மக்கள் அதிகமாக வாழும் யாங்கூன் நகருக்கு செல்லும் அவர், அவர்களிடையே சிறப்புரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாலைமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக