வெள்ளி, 8 செப்டம்பர், 2017

இனி முழுதமிழகமும் மெரீனாதான் .. ஓசூரில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்!

படுகொலை செய்யப்பட்ட அரியலூர் மாணவி அனிதாவின் இறப்பில், ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – அடிமை அதிமுக – உச்சிக்குடுமி நீதிமன்றம் – இவர்கள்தான் முதன்மைக் குற்றவாளிகள்!
தமிழகத்தை ஒழித்துக்கட்டாமல் விடாது பி.ஜே.பி! 
பி.ஜே.பி -யை ஒழித்துக்கட்டாமல் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது! 
தமிழகத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் மெரினா ஆக்குவோம்!
 ஆகிய முழக்கங்களை முன்வைத்து மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர்கள் ஆர்ப்பாட்டம், தெருமுனைப்பிரச்சாரம் போன்ற வடிவங்களின் வழியே மக்களிடையே கருத்துக்களை கொண்டு சென்றனர்.அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகே 7.9.2017 அன்று வியாழன் காலை 11.30 மணியளவில் “மாணவி அனிதா படுகொலையை கண்டித்தும், நீட் தேர்வை அடியோடு ரத்து செய்யக் கோரியும்” விண்ணதிர முழக்கங்கள் முழங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த தோழர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அவ்வமைப்பைச் சேர்ந்த தோழர் சரவணன் , தோழர் முனியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக, தோழர் ராம் நன்றியுரையாற்றினார். வறிய கிராமப்புற மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கின்ற நீட் தேர்வு முறையை அடியோடு ரத்து செய்யும் வரை மக்கள் ஒன்றிணைந்து போராட முன்வரவேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் அமைந்திருந்தது. கடை வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தை பார்த்து உரையை கேட்டு ஆதரவு தெரிவித்து சென்றனர்.


அதற்கு முன்னதாக, நாட்றாம்பாளயம் கிராமத்தில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தினர். மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சார கூட்டங்களில் அவ்வமைப்பைச் சேர்ந்த தோழர் சரவணன், தோழர் செந்தில்  ஆகியோர் உரையாற்றினர். பெரும்பாலான பெண்கள், பள்ளி மாணவ மாணவிகளிடையே நீட் தேர்வால் ஏற்படும் இழப்பை பருண்மையாக விளக்கிப் பேசி அதற்கு காரணமான இந்த மத்திய, மாநில அரசுகளை அம்பலப்படுத்தி பேசியபோது அவர்களும் ஆமோதித்தனர். விடக்கூடாது போராடி முறியடித்தே தீரவேண்டும் என கூறிச் சென்றனர்.


தகவல் :
மக்கள் அதிகாரம்.
தொடர்புக்கு : தோழர் சரவணன்,
நாட்றாம்பாளையம். 

***

பாகலூரில் சர்க்கிள் அருகே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர்கள் மாணவி அணிதா படுகொலையை கண்டித்து 05.09.2017 செவ்வாய் அன்று காலை 11.30 மணியளவில் தெருமுனைப் பிரச்சாரம் செய்தனர்.  ஆர்ப்பாட்டம் போல் நடத்தப்பட்ட இந்த தெருமுனைப்பிரச்சாரத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த தோழர் மஞ்சு தலைமை தாங்கினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் ரவி, மக்கள் அதிகாரம் அமைப்பாளர் தோழர் காந்தராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பாகலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்களின் பிள்ளைகள் பெரும்பாலானோர் அரசுப் பள்ளியை நம்பியே உள்ளனர். நீட் இவர்களின் நம்பிக்கையை எவ்வாறெல்லாம் சீர்குலைக்கும் என்பதை அவர்களும் உணரும்படி இந்த கூட்டத்தில் பேசப்பட்ட உரை அமைந்திருந்தது.



தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஓசூர்
தொடர்பு எண் : 88830 92572

கருத்துகள் இல்லை: