The woman was allegedly gang-raped by 18 to 20 youths aged between 18 and 22 years near a university campus at Dighi in Jharkhand. ... DUMKA: A 20-year-old tribal woman was allegedly gang-raped by 18 to 20 youths aged between 18 and 22 years near a university campus at Dighi, 8km from ...
ஜார்கண்ட் மாநிலம் தும்கா நகர் அருகில் கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலன் கண் முன்னே 20 பேரால் 3 மணி நேரம் வரை கற்பழிக்கப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தும்கா நகர் அருகே டிஜி என்ற இடத்தில் பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. அதன் அருகில் பழங்குடியினத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்துள்ளது. காதலன் வேறு ஜாதியை சேர்ந்தவன் என்பதால், நீ எதற்கு பழங்குடியின பெண்ணை காதலிக்கிறாய் என கூறி தகராறு செய்தனர். அவர்கள் அந்த பெண்ணின் காதலனை அடித்து, உதைத்து அவனிடம் இருந்த செல்போனையும் பறித்துக்கொண்டு அவனை மரத்தில் கட்டிப்போட்டனர். அதன் பின்னர் கத்தி முனையில் மிரட்டி அந்த பெண்ணை 6 பேரும் மாறி மாறி கொடூரமாக பலாத்காரம் செய்தனர்.
அதன் பின்னர் அவர்கள் தங்கள் நண்பர்களை போன் போட்டு அழைத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய வைத்தனர். 20 பேர் வரை அந்த பெண்ணை 3 மணி நேரம் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணை அருகில் உள்ள குளத்துக்கு அழைத்து சென்று தடையங்களை அழித்துவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளது.
இதனையடுத்து அவர்கள் மீது அந்த பெண்ணும் அவரது காதலனும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் பெண் மாஜிஸ்திரேட் மருத்துவமனைக்கே சென்று வாக்குமூலம் பெற்றுள்ளார். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் 18 முதல் 22 வயது உடையவர்கள் என கூறப்படுகிறது. பலாத்கார செயலில் ஈடுபட்ட 6 பேரை தற்போது கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்
மாலைமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக