வெள்ளி, 8 செப்டம்பர், 2017

திருச்சி பொதுக்கூட்டம் தடைகளை உடைத்தது .. வரலாறு படைத்தது !

Sivasankaran Saravanan s · நீதிமன்ற உத்தரவை பார்த்து தமிழ்நாடு காவல்துறை தடை விதிக்குமாம். தடையை மீறி கூட்டம் நடத்தினால் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, "சேச்சே நான் அப்படி சொல்லலம்மா, வன்முறையா போராட்டம் நடத்தவேண்டாம் னு தான் சொன்னோம் " னு உச்சநீதிமன்றம் பல்டி அடிக்கிறது. ஏன்யா வன்முறையை தூண்டுறாபோலயோ சட்டம் ஒழுங்கு சீர்கேடோ இருந்தால் அதுக்கு ஏன் சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போக போறாங்க? லோக்கல் போலீஸ் ஸ்டேசன் போலீசே போதும். ஆக இவர்கள் ஆழம் பார்த்துள்ளார்கள். நாமளும் இந்த சங்கிமங்கீஸ் அலப்பறைய கேட்டு மோடிய இந்திராகாந்தி ரேஞ்சுக்கு ஓவர் எஸ்டிமேட் பண்ணிட்டோம். அவ்ளோ லாம் வொர்த் இல்ல ன்னு தெரிஞ்சுபோச்சு. தமிழகம் எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்கும். ஆனால் சுயமரியாதையை மட்டும் தமிழர்கள் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத்தரமாட்டார்கள் என்பது காவிக்கூட்டத்திற்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை காவல்துறை ரத்து செய்தபோதிலும், திட்டமிட்டபடி இன்று மாலை பொதுக்கூட்டம் தொடங்கியது. திருச்சியில் தடையை மீறி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் தொடங்கியது: ஸ்டாலின்-தலைவர்கள் மேடைக்கு வந்தனர்
திருச்சி: நீட் தேர்வுக்கு எதிராக இன்று திருச்சியில் எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 8 கட்சி தலைவர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த கண்டனப் பொதுக் கூட்டத்திற்காக திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பொதுக்கூட்ட திடலுக்கு கட்சி தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இந்த தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில், திருச்சி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்தது. கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதற்கு தலைவர்கள் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தனர். தினமணி


கருத்துகள் இல்லை: