10 நாட்களுக்கு முன்னதாக ராஜபக்சேவின் ஆதரவாளர் ஒருவர்
பிரதமர் மோடி இலங்கை வரும்போது கருப்புக்கொடி காட்டி போராட்டம்
நடத்தப்போவதாகவும் அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும்
என்றும் கோரியிருந்தார். ராஜபக்சேவின் ஆதரவாளர் அவ்வாறு கூறியிருந்த
நிலையில் நேற்று நடந்துள்ள மோடி – ராஜபக்சே சந்திப்பு முக்கியத்துவம்
பெற்றுள்ளது.
கடந்த 2015-ல் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில்
ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். தனது தோல்விக்கு இந்திய அரசே காரணம் என
பகிரங்கமாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஆனால், அண்மையில் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு அவர்
அளித்தப் பேட்டியில் பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டிப் பேசியதோடு. தன்னை
மோடி மிகவும் கவர்ந்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.
மோடியை ராஜபக்சே பாராட்டிய சில நாட்களிலேயே மோடி – ராஜபக்சே சந்திப்பு நிகழ்ந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. tamilthehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக