புதன், 10 மே, 2017

சிறுவனால் பலாத்காரம், கொலை செய்யப்பட்ட 7 பெண்கள்: குமரியில் நடந்த கொடூர சம்பவம்!

கன்னியாக்குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே 17 வயது சிறுவன் ஒருவன் 7 பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதனை இந்த சிறுவன் 7 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து செய்துள்ளான். அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த 63 வயதான பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் தனியாக வந்து கொண்டிருந்தபோது கண்ணுப் பொத்தை காட்டுப்பகுதிக்கு சிலரால் கடத்தப்பட்டார். அங்கு அவர்கள் அந்த 63 வயதான பெண்ணை பலாத்காரம் செய்து பின்னர் தனது நண்பர்கள் சிலரையும் வரவழைத்து கும்பலாக சீரழித்துள்ளனர். மொத்தம் 7 பேர் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்து பின்னர் தலையில் கல்லைப் போட்டு கொன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், இவர்கள் 7 பேரும் கும்பலாக செயல்பட்டு தனியாக பெண் யாராவது சிக்கினால் அவர்களை கடத்தி அதே கண்ணுப் பொத்தை பகுதிக்கு கொண்டு வந்து பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்து வந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த பெண்ணை தவிர மேலும் 6 பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட மேலும் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  வெப்துனியா

கருத்துகள் இல்லை: