
தமிழ்நாட்டைவிட குஜராத் மாடல் தான் உயர்ந்தது, அதனால் இந்தியா முழுவதும் குஜராத் மாதிரி வளர மோடிக்கு ஆதரவு தாருங்கள் என்று சொன்னபோது - இல்லை இல்லை தமிழ்நாட்டு மாடல் தான் மிகச்சிறந்தது என்று திமுகவும் அதிமுகவும் ஒன்றாக உறுதியாக முழங்கின. விளைவு, மோடி அலை இங்கே நுழையவில்லை. குஜராத் மாடல் தரத்தில் உயர்ந்தது என்ற வாதம் இங்கே பல்லிளித்தது. ஒவ்வொரு முறையும் 'தகுதி, திறமை' என்ற கருத்து எழும்போதெல்லாம் நம் மக்களில் சிலரும் அதற்கு மயங்கிவிடுகிறார்கள். இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்றும் அதைப் படித்துவிட்டால் அகமதாபாத்திலே வேலை கிடைக்கும் என்றும் திரும்ப திரும்ப சொல்லப்பட்டாலும் அந்த இந்தியைப் புறக்கணித்துவிட்டு இந்தியாவின் மிகச்சிறந்த மாநிலங்களில் முதன்மையானதாக தமிழ்நாடு விளங்குகிறதே! இந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலங்கள் தான் வளர்ச்சியில் பின்தங்கி இருக்கின்றன. தகுதியை வளர்க்கிறோம் திறமையை மேம்படுத்துகிறோம் என்று மாணவர்களின் சட்டையை வெட்டியிருக்கிறார்கள், மாணவிகளின் தோடுகளை அகற்றியிருக்கிறார்கள்..ஒன்றை நிச்சயமாக சொல்ல முடியும்..அடக்குமுறைகளை எதிர்த்து நின்ற 2000 ஆண்டுகால வரலாறு தமிழ் மண்ணிற்கு உண்டு. திருக்குறள் கூட அடக்குமுறைகளுக்கு எதிராக எழுந்த கலகக்குரல் தான். அடிக்க அடிக்க தான் பந்து மேலே எழும்பும்..இன்னும் அடியுங்கள். Ezhil arasan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக