சனி, 13 மே, 2017

பஞ்சாப் பிரிவினைவாதிகள் விழாவில்) கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ... இந்தியா கண்டனம்

டோரண்டோ: கனடாவில் ‛‛கல்சா'' தின விழாவில் பங்கேற்ற அந்நாட்டு பிரதமர் ஐஸ்டின் ட்ரூட்டிற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. கனடாவில் சீக்கிய மதத்தினர் பெருமளவு வசிக்கின்றனர். இவர்களில் பலர் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக கோரி போராடி வந்த காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.
இந்நிலையில் கனடாவின் டோரன்டோவில் கடந்த ஏப். 30ம் தேதி ‛‛கல்சா' தினம் கொண்டாடப்பட்டது. இதில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டே கலந்து கொண்டார். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரிவினைவாதிகளுக்கு கனடா பிரதமர் ஆதரவு தெரிவிப்பது இந்தியாவுடனான உறவை பாதிப்பது போல உள்ளது என கூறியுள்ளது.
இது குறித்து டில்லியில் உள்ள கனடா தூரக அதிகாரி கூறுகையில், கனடா பிரதமர் பங்கேற்றது குறித்து தாம் கருத்து சொல்ல முடியாது என்றார். தினமலர்

கருத்துகள் இல்லை: