
இதில் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் உள்ள மையத்திற்கு தேர்வு எழுதச்
சென்ற மாணவியிடம் அவரது உள்ளாடையை அகற்ற வேண்டுமென தேர்வு கண்காணிப்பாளர்
கூறினார். இதனால் அந்த மாணவி, உள்ளாடையை அகற்றி

பெற்றோரிடம் கொடுத்து
விட்டு தேர்வு எழுதச் சென்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்னது தொடர்பாக சம்பவம் அரங்கேறிய
பள்ளியை சேர்ந்த நான்கு ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதோடு, பள்ளியின்
முதல்வர் பாதிக்கப்பட்ட மாணவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்
என்றும் சி.பி.எஸ்.இ உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுக்க எதிர்ப்பலையை ஏற்படுத்தியுள்ள விவகாரம் தொடர்பாக,
பாதிக்கப்பட்ட மாணவி சார்பில் கன்னூர் காவல் நிலையத்தில் புகார்
அளிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த சம்பவம் மனித உரிமை மீறல் என சமூக ஆர்வலர்கள் குற்றம்
சாட்டினர்.
கேரள மாநில மனித உரிமை கமிஷன் இது தொடர்பாக நீட் தேர்வை
நடத்திய சி.பி.எஸ்.இ.யிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதோடு கண்ணூர்
மாவட்ட போலீஸ் அதிகாரி தேர்வு நடத்திய அதிகாரிகள் 3 வாரத்தில் இச்சம்பவம்
குறித்து பதில் அளிக்க வேண்டுமென்றும் கூறி இருந்தது.
மேலும் தேசிய மனித உரிமை கமிஷன் இந்த பிரச்சனை குறித்து விசாரிக்க
வேண்டும் என்றும் மாநில மனித உரிமை கமிஷன் கூறி இருந்தது. கேரள
முதல்-மந்திரி பினராயி விஜயனும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து,
தேர்வு எழுதச்சென்ற மாணவிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்குமென்றும்
கருத்து தெரிவித்திருந்தார்.மாலைமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக