புதன், 10 மே, 2017

கோடம்பாக்கம் சாலையில் எண்ணைய் ... வாகனங்கள் வழுக்கி பலர் விழுந்து காயம் .

திடீரென எண்ணெய் படலமான சென்னை கோடம்பாக்கம் சாலை!
சென்னை கோடம்பாக்கம் முதல் வடபழனி வரையிலான சாலையில் திடீரென உருவாகிய எண்ணெய் போன்ற படலத்தால், இருசக்கர வாகனத்தில் சென்ற பலர் வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்தனர் சென்னையில் குப்பை லாரிகளிலிருந்து கசிந்த கழிவுகள் சாலையில் படிந்திருந்த நிலையில், ஒரு சில இடங்களில் நேற்றிரவு திடீரென பெய்த மழையால், அக்கழிவுகள் வழவழப்பாக மாறின. அவை, சாலையில் எண்ணெய் படலம் போல பரவியதால், இருசக்கர வாகனத்தில் சென்ற பலர் வாகனத்துடன் சறுக்கி விழுந்தனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.< திடீரென உருவாகிய எண்ணெய் போன்ற படலத்தால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள், தார் சாலை உருகியதே விபத்து நேரிடக் காரணமென குற்றம் சாட்டினார். இருப்பினும், வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்லுமாறு அறிவுறுத்திய போலீஸார், சாலைகளில் மணலை தூவி, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.ns7

கருத்துகள் இல்லை: