புதன், 10 மே, 2017

ஆசிரியை கொலை வழக்கில் கைதான தீயணைப்பு வீரர் சிறையில் மரணம்!

கடந்த திங்கட்கிழமை கோவை ஆசிரியை நிவேதிதாவை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் கைதான தீயணைப்பு வீரர் இளையராஜா சிறை கழிவறையில் கைழியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .. நேற்று முன்தினம் அண்ணாநகர் அருகே கோவையை சேர்ந்த பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரியும் நிவேதிதா கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக தீயணைப்பு வீரரான இளையராஜாவை அண்ணாநகர் போலீசார் கைது செய்து நேற்று இரவு புழல் சிறையில் அடைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று காலை அவர் சிறை கழிவறையில் கைழியால் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதாக சிறைதுறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
முதல் கட்டமாக அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார். இதையடுத்து தற்பொழுது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. நக்கீரன்

கருத்துகள் இல்லை: