
இந்நிலையில் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இதில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு உற்பத்தி செய்ய ஆதரவான அறிக்கைகளை மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (GEAC), தயார் செய்து சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அறிக்கையாக அனுப்பிவைத்து ஒப்புதல் கோரியுள்ளது.
இதுகுறித்து GEAC-யின் தலைவர் அமிதா பிரசாத் கூறும்போது, ”இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு உற்பத்தி செய்ய GEAC முயற்சி மேற்கொண்டு வருகிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகின் பாதுகாப்புக் குறித்து ஆய்வு நடத்தி GEAC-யின் துணைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பரிசீலித்து ஒப்புதல் அளிக்க மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
தற்போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பிரச்னை இறுதிக் கட்டத்தில் உள்ளது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் தேவ் அனுமதி அளிக்கும்பட்சத்தில், விரைவில் வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கு மரபணு மாற்றுக் கடுகு உற்பத்தி செய்யப்படவுள்ளது. மின்னம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக