செவ்வாய், 9 மே, 2017

அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல் சுப்பிரமணியம் மர்ம மரணம்!

திடீர் மரணம் ஐடி ரெய்டு அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல் சுப்பிரமணியத்திலும் மர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. By: Mathi நாமக்கல்: அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பர் சுப்பிரமணியத்தின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதில் குழப்பமான தகவல்கள் வெளியாகி உள்ளன. அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மிகவும் நெருக்கமானவர் அரசு ஒப்பந்ததாரரான நாமக்கல் சுப்பிரமணியம். தமிழக அரசு மருத்துவமனை கட்டுமான ஒப்பந்தங்களை பெற்றவர் சுப்பிரமணியம். ஐடி ரெய்டு விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தபோது நாமக்கல்லில் சுப்பிரமணியத்தின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. இந்த நிலையில் இன்று தமது பண்ணை வீட்டில் சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின.


ஆனால் இதை அவரது குடும்பத்தினர் தற்போது மறுத்துள்ளனர். சுப்பிரமணியத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டுதான் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமான நண்பர் அண்ணா நகர், முன்னாள் அமைச்சர் ராஜாவின் நண்பர் சாதிக்பாட்சா ஆகியோரது மரணங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திலும் மர்மம் தொடருகிறது. அவரது கொடநாடு பங்களா கொலை, கொள்ளை தொடர்பான சம்பவங்களில் தொடர்புடையோர் மரணங்களிலும் மர்மம் நீடிக்கிறது. இந்த நிலையில் விஜயபாஸ்கர் நண்பர் சுப்பிரமணியத்திலும் மர்மம் இருப்பது குறிப்பிடத்தக்கது.  tamiloneindia

கருத்துகள் இல்லை: