வியாழன், 1 ஜூன், 2017

இந்தியா ஜிடிபி 6.1 ஆக சரிவு . இனி நாம் வளரும் நாடுகள் பட்டியலில் இருக்கப்போவதில்லை.

swaravaithee: இந்த நிலைக்குக் காரணம் டிமானிடைசேசன் எனப்படும் 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று ஒரே ராத்திரியில் அறிவித்ததே.
உடனே சில தேச விரோதிகள் நரேந்திரமோடி மீது பாய்வார்கள். அவர்களுக்கெல்லாம் பொருளாதாரத்தைப் பற்றி என்ன தெரியும் நம் நோக்கம் கருப்புப் பணத்தை ஒழிப்பது தானே தவிர, ஜிடிபியை உயர்த்துவது அல்ல.
இப்போது வெளிவந்திருக்கக்கூடிய ஜிடிபி அறிக்கைகூட சில கருப்பு பண முதலைகள் செய்துள்ள சதி.
உங்களுக்கு என்ன தெரியும்? கருப்புபண முதலைகளை ஒடுக்க நம் பாரத பிரதமர் நரேந்திரமோடி எவ்வளவு பாடுபடுகிறார். எவ்வளவு நெருக்கடிகளை சந்தித்து வருகிறார் என்பது எனக்குத் தெரியும்.

நேத்தி சாயந்திரம்கூட அவர் என்னிடம் போனில் பேசும்போது கூட தேம்பித் தேம்பி அழுதார்.
நாட்டு நலனுக்காக நான் என்ன பண்ணாலும், இந்த தேச விரோதிகள் எதிர்க்கறாங்களே என்று வருந்தினார்.
நான் தான் கவலைப்படாதீர்கள் சகோ. பிரியங்கா சோப்ராவிடம் இது பற்றி பேசுங்கள் என்றேன். பேசிவிட்டார்.
இனி பாருங்கள்

கருத்துகள் இல்லை: