புதன், 31 மே, 2017

சென்னை குமரன் சில்க்ஸ் இல் தீவிபத்து மின்கசிவு காரணமா? தியாகராய நகர் உஸ்மான் ரோடில்

தினமணி :சென்னை தியாகராய நகரில் உள்ள உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடையில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்திற்குள்ளான துணிக்கடையின் மேல்தளத்தில் தங்கியிருந்த ஊழியர்கள் 11 பேரை தீ அணைப்பு படை வீரர்கள் மீட்டுள்ளனர். 4 மணி நேர போராட்டத்திற்குப்பின், கிரேன் மூலம் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக ஊழியர்களை மீட்டனர். கடையின் 7 வது மாடி வரை பரவியுள்ள புகையை ரசாயன கலவை மூலம்  கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் கூறுகின்றன. தீ விபத்தை தொடர்ந்து, உஸ்மான் சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது

நக்கீரன்: இன்று அதிகாலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டும், அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. ஏனெனில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதால தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று தீயை அணைக்க மிகவும் சிரமமாக உள்ளது. தீயை அணைப்பதற்கு 7க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் வந்தன. மேலும் தண்ணீர் வாகனமும், ஸ்கை லிஃப்டும் இந்த பகுதிக்கு வந்துள்ளது. மொத்தம் 72 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் புகை முதலில் வெளியேற்றும் நடவடிக்கையில் முதல் கட்டமாக ஈடுபட்டனர். சென்னை சில்க்ஸ் கடையின் அடித்தளத்தில் மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்துகள் இல்லை: