செவ்வாய், 30 மே, 2017

திருமுருகன் காந்திக்காக ஸ்டாலின் குரல் கொடுக்கிறார் .. ஆனால் வெளியே வந்ததும் முதல் வேலையாக திமுகவை ,,,

stanley.rajan. திருமுருகன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம். இந்த திமுக மீது இருக்கும் கோபம் இதுதான், இம்மாதிரி நபர்களை முழுக்க விலக்கவும் மாட்டார்கள், சேர்க்கவும் மாட்டார்கள். அவன் திமுகவினை எப்படி எல்லாம் பேசினான்? இந்த நாட்டை எப்படி எல்லாம் வசைபாடினான்? ஆனால் இன்று ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கின்றாராம். இவர் என்ன நினைத்து கொண்டிருக்கின்றாரோ தெரியவில்லை, அரசியல் செய்ய ஆயிரம் வழி இருக்கின்றது, ஆனால் இப்படி அல்ல‌. ஒருவரை நாட்டு பாதுகாப்பு வழக்கில் உள்ளே குண்டர் சண்டத்தில் வைக்கும்பொழுது, எதிர்கட்சி கண்டித்தால் என்ன அர்த்தம்? எங்களையும் தடை செய்யுங்கள் என்பது போன்ற அர்த்தம். திமுக 1960ல் நெருப்பாறை கடந்தது, தடை எனும் கண்டத்தை கடந்துதான் வந்தது. அண்ணாவும், கலைஞரும் அந்த திமுகவினை தேசிய நீரோட்டத்துடன் இணைந்துதான் கொண்டு சென்றார்கள், அதுதான் யதார்த்தம். இன்று மாட்டுகறியினை விட கொடுமையானது அன்றைய மிசா, அன்று கூட கலைஞர் பிரிவினை பற்றி நினைத்தே பார்க்கவில்லை. மாட்டுகறி அரசியலுக்கெல்லாம் திருமுருகனை ஆதரித்தால் , ஸ்டாலின் திமுகவில் மண் அள்ளி போடுகின்றார் என்பது நிஜம். சரி, விரைவில் வெளிவந்த திருமுருகன் என்ன பேசுவார்? ஈழதமிழரை கொன்றது /; ஸ்டாலின் இம்மாதிரி எல்லாம் அரசியல் செய்தால் பெரும் சிக்கலில் சிக்குவது உறுதி
பாஜகவினை எதிர்க்க தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்கின்றோம் என்பது சரி, அதில் இம்மாதிரி விஷங்களுக்கு ஆதரவு என கிளம்புவது அபத்தம்
அது சயனைடு கடிப்பதற்கு சமம், ஸ்டாலின் அதனை கடிக்க விரும்புகின்றார் என்றால் கடிக்கட்டும்

கருத்துகள் இல்லை: