வியாழன், 1 ஜூன், 2017

பதஞ்சலி .. 40 சதவீதப் பொருட்கள் தரம் குறைவானவை: ஆர்.டி.ஐ தகவல்

Ramdev's Patanjali products fail quality test, RTI inquiry finds
பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகளில் 40 சதவீதப் பொருட்கள் தரம் குறைவானவை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. பாபா ராம்தேவின், பதஞ்சலி நிறுவனப் பொருட்கள் தரம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. இதில், பதஞ்சலி நிறுவனத்தின் 40 சதவீதம் பொருட்கள் முழுமையான ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படவில்லை என்றும், பொருட்களின் தரம் குறைவாக இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ் மற்றும் ஷிவிங்கி பீஜ் ஆகிய பொருட்கள் தரமற்றவை எனவும், இதில் 31.68 சதவீதம் அந்நிய நாட்டு மூலப்பொருட்கள் கலந்திருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலியின் மேலாண்மை இயக்குநரான ஆச்சார்ய பாலகிருஷ்ணா ஆகியோர் மறுத்துள்ளனர். இதற்காக, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஆயுர்வேத மற்றும் யுனானி அலுவலகத்தில் ஆய்வு நடத்தப்பட்டதாகவும், மேலும் பல சோதனைகள் நடத்தப்பட உள்ளதாகவும் ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. liveday.com


கருத்துகள் இல்லை: