வியாழன், 1 ஜூன், 2017

காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் அமலாக்க துறை கடும் சோதனை ..

மும்பை, மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக, காங்., தலைவர் பாபா சித்திக் உள்ளிட்ட பலரது இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள், , அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர்.
மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வை சேர்ந்த, தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக உள்ளார். இங்கு, முந்தைய காங்., ஆட்சியில், மும்பை புறநகர் பகுதியான பாந்த்ராவில், குடிசைப் பகுதிகளை மறுசீரமைக்கும் பணிகளில் நிதி முறைகேடுகள் நடந்ததாக, போலீசார், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். போலி நிறுவனங்கள் துவக்கப்பட்டு, அவற்றின் மூலம் நிதி முறைகேடுகள் நடந்திருக்கலாம் என, அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது.

மும்பையை சேர்ந்த, காங்., தலைவர் பாபா சித்திக், மாநகராட்சி உறுப்பினராக இருந்தபோது, குடிசைப் பகுதிகளை மறுசீரமைக்கும் பணிகளுக்காக, போலி நிறுவனங்களை துவக்கி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதுதொடர்பாக, சித்திக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு எதிராக, போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அவர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தினமலர்

கருத்துகள் இல்லை: