செவ்வாய், 30 மே, 2017

வெங்கட் பிரபுவின் புதிய படத்தின் பெயர் " ஆர்.கே.நகர் " கங்கை அமரனின் மகன் ...

சென்னை: தமிழகத்தில் பெரிதும் பேசப்பட்டு வந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் என்ற தொகுதியின் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் அந்த பெயரை தனது படத்துக்கு தலைப்பாகி உள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக இரண்டாக பிளவுபட்டதை தொடர்ந்து, எந்த அணிக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்ள இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இதில் பலமுனை போட்டி நிலவிய நிலையில் அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரனும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர். இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியை எப்படியாயினும் பெற்று விட வேண்டும் என்ற அனைவரும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

தேர்தல் ஆணையம் ரத்து செய்தது இந்நிலையில் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததை அடுத்த தமிழகம் முழுவதும் வருவாய் துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது வருமான வரித்துறையின் அறிக்கையின் படி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. மக்களும் ஏமாற்றமடைந்தனர்.
இந்த தொகுதியின் பெயரை தான் தயாரிக்கும் புதிய படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளார் வெங்கட் பிரபு. ‘சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகத்தை அவரது பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் சார்பில் தயாரித்த வெங்கட் பிரபு, இரண்டாவது படமாக வைபவ் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க முன்வந்தார். இந்த படத்துக்கு இதுவரை தலைப்பு வைக்கப்படாமலே இருந்து வந்தது.

தற்போது இப்படத்திற்கு ‘ஆர்.கே.நகர்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ‘வடகறி' படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்குகிறார். வைபவுக்கு ஜோடியாக ‘சென்னை 600028' இரண்டாம் பாகத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்த சானா அல்தாப் நடிக்கிறார். சம்பத் வில்லனாக நடிக்கிறார்.

 ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் முன்னிறுத்தப்பட்டார். தேர்தல் ரத்தானதால் அவரால் கைப்பற்ற இயலாத ஆர்.கே.நகர் தொகுதியை அவரது மகன் வெங்கட் பிரபு கைப்பற்றியுள்ளார்.  tamiloneindia

கருத்துகள் இல்லை: