புதன், 31 மே, 2017

பார்ப்பன ஆண்கள் மட்டுமே இந்தியாவிற்குள் வந்தனர் .. இந்திய பெண்களை மணந்தனர்? பார்பனீயத்தின் ஆணாதிகத்துக்கு காரணம் இதுதான்?

ilangovan.balakrishnan.: ஆண்களால் ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட ஆண்களின்
வன்முறைதான் மதம் என்பது."
இதில் இந்து மதத்துக்கென்று ஒரு கூடுதல் ஸ்பெசாலிடி உண்டு.
"பார்ப்பன ஆண்களால் பார்ப்பன ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட பார்ப்பன ஆண்களின் வன்முறைதான் இந்து மதம் என்பது."
ஏனெனில் இந்து மதத்தின் மூலமான வைதீக மதத்தை உருவாக்கிய பார்ப்பனர்கள் இந்தியாவுக்கு வந்த போது அவர்களுடன் பெண்களைக் கொண்டு வந்ததாகச் சான்றில்லை. எனவே பார்ப்பன ஆண்கள் மட்டுமே இந்தியாவிற்குள் புகுந்ததாய் அனுமானிக்க வேண்டியிருக்கிறது.
ஒருவேளை குறிப்பிடும் அளவில் இல்லாமல் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் வந்திருக்கலாம்.
இதன் காரணமாய் ஆரியர்கள் பெண்டாள எடுத்த பெண்கள் எல்லோரும் இந்த மண்ணின் மைந்திகளாகவே அமைந்திருந்தனர். கன்னிகா தானங்கள் என்று உழைக்கும் வர்க்கத்தின் பெண்களை கலவிக்காக ஆரிய பார்ப்பனர்கள் அபகரித்துக் கொண்டார்கள்.
அப்படி இந்த மண்ணின் இருந்து பெறப்பட்ட பெண்களிடம் கலவி வைத்துக் கொண்டாலும் கூட பார்ப்பனர்களால் ஒருபோதும் தனக்குச் சமமாய் இந்தப் பெண்களை வைத்துக் கொள்ள மனம் ஒப்பவில்லை. எனவே அதற்கு அவர்கள் முன் வரவே இல்லை.

எனவேதான் வேதத்தில் சூத்திரர்களையும், பெண்களையும் சம நிலையில் வைத்தனர்
பார்ப்பனர். சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் கல்வி கற்க உரிமை இல்லை என்றனர்.
இதன் காரணமாகவே....
மற்ற மத நூல்களில் பெண்ணை ஒரு சொத்தாக, அடிமையாக மட்டும் பார்க்கும் பார்வை இருக்கிறது.
இந்து மத நூலில் மட்டும் பெண்ணை அடிமையாக மட்டுமல்லாமல் எதிரிகளிடம் காட்டும் வன்மத்தோடும் பார்க்கும் பார்வையைக் காண முடிகிறது.
இதற்கான உதாரணங்கள் கீழே:
பெண்களுக்கு தனி அடையாளங்களையோ சுயேச்சையான செயல்பாடுகளையோ மனு தர்மம் நிராகரிக்கிறது. அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை அது அனுமதிக்கவில்லை.
இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர்
— மனுதரும சாத்திரம் , அத்தியாயம் 9 செய்யுள் 3
எந்தப் பருவத்தினளாயினும் தனது இல்லத்தில் கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலாகாது.
— மனுதரும சாத்திரம் , அத்தியாயம் 5 செய்யுள் 147
பெண்களை ஒழுக்கக் கேடானவர்களாகவும் மயக்கும் குணம் கொண்டவர்களாகவும் மனுதர்மம் சித்தரிக்கிறது. பாலியல் ரீதியில் ஒழுக்கக் கேடுகள் எவையாவது நடந்தால் அதில் ஆணுக்கு பொறுப்பு எதுவுமில்லை என்பது போலவும் அவனை ஒரு அப்பாவியைப் போலவும் கருதி பெண்களை மனுதர்மம் இழிவுபடுத்துகிறது.
தங்கள் அலங்காரத்தால் மனிதரைக் கவரும் தன்மை பெண்களின் இயல்பாகையால் அறிந்தோர் பெண்களிடம் கவனக் குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள்.
— மனுதரும சாத்திரம் , அத்தியாயம் 2 செய்யுள் 213
புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர்.
— மனுதரும சாத்திரம் , அத்தியாயம் 2 செய்யுள் 214
பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் குறப்படுவனவற்றையும் கேட்பீராக.
— மனுதரும சாத்திரம் 9, அத்தியாயம் செய்யுள் 19
இவ்வாறு பெண்களை இழிவுப்படுத்தும் மனுதர்மம் மாதரைக் காப்பாற்றுவதற்கான காரணத்தையும் விளக்குகிறது .
வீட்டிற்கு வேண்டிய பாத்திரம் முதலியவற்றை தேடிப் பெறுவதற்காக பொருளை அவளிடம் கொடுத்தும் அதனைக் காப்பாற்றி வைத்து வேண்டிய போது செலவிடும்படி செய்தும் தட்டு முட்டுச் சாமான்களை சுத்தமாக வைத்துக் கொள்ளச் செய்தும் வீட்டை துப்புரவாக்கி வைத்தல், தேவ பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்தல், அடுக்களைப் பொறுப்பு, பாத்திரம் படுக்கை முதலியவற்றைச் சரியாக கவனித்துக் கொள்ளல் போன்ற இன்றியமையாத இல்லத்துக் காரியங்களை மனைவிக்குக் கற்பித்து அவற்றை அவளைக் கொண்டு செய்வித்தல் போன்றவற்றாலும் அவளது மனம் வேறிடம் செல்லாமற் காக்க!
— மனுதரும சாத்திரம் , அத்தியாயம் 9 செய்யுள் 11
கணவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் பெண் அவனுக்கு அடங்கி நடக்க வேண்டுமென்று விதிக்கிறது மனுதர்மம்.
கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும்.
— மனுதரும சாத்திரம் , அத்தியாயம் 9 செய்யுள் 78
இழிநடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும் கற்பினாளான பெண் தன் கணவனை தெய்வமாகப் பேணுக.
— மனுதரும சாத்திரம் , அத்தியாயம் 5 செய்யுள் 154
மறுமையின் பத்தில் நாட்டமுள்ள பெண்மணி தன் கணவன் இருப்பினும் இறப்பினும் அவன் கருத்துக்கு மாறுபாடாக நடக்கக் கூடாது.
— மனுதரும சாத்திரம் , அத்தியாயம் 5 செய்யுள் 156.
ஆக மொத்தம் இந்த மனு (அ) நீதியைத் தெரிந்து கொள்வது சமகாலத்திய எல்லா பெண்களுக்கும் அவசியமானதாகும்.
சுயசார்புடன், சுய மரியாதையுடன் வாழும் எந்தப் பெண்ணும் குறைந்த பட்ச அறிவும், சுரணையும் கொண்டிருந்தால், தன்னை ஒரு இந்து என்று அடையாளம் சொல்லிக்கொள்ளமாட்டாள்.

28.05.2014

கருத்துகள் இல்லை: