சனி, 3 ஜூன், 2017

நான் ரெடி நீங்க ரெடியா? தமிழகத்தை நோக்கி மம்தா பானர்ஜி கட்சி தலைவர் டெரிக் ஓ பிரையன் கேள்வி! பிராந்திய கட்சிகள் மத்தியில் ...


mayura-akilan.: சென்னை: பிராந்திய கட்சிகள் டெல்லி
அரசியலில் மிகப்பெரிய பங்காற்ற வேண்டும். நான் ரெடி... நீங்க ரெடியா என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.டெரிக் ஒ.பிரையன் கேட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டும். ஒட்டு மொத்த மேற்கு வங்க மக்களும் கருணாநிதியை வாழ்த்துவதாகவும் அவர் கூறியுள்ளார்< ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கருணாநிதி சட்டசபை வைரவிழாவில் ராகுல், நிதிஷ் குமார், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, உமா அப்துல்லா டெரிக் ஓ பிரையன், நாராயணசாமி, திருநாவுக்கரசர், காதர்மொய்தீன் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.
கருணாநிதி என்ற ஆளுமை மிக்க தலைவரை அனைவரும் வாழ்த்தி பேசினர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவர் டெரிக் ஓ பிரையன், தனது பேச்சை தமிழில் உற்சாகமாக தொடங்கினார்.

திமுக தலைவர் கருணாநிதி ஆளுமை மிக்க மிகச்சிறந்த தலைவர் அவர் விரைவில் நலம் பெற வேண்டும். மேற்கு வங்கமும், தமிழகமும் பல வழிகளில் ஒன்றுபட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போல, பெண்களின் சக்தியை உணர்ந்த கட்சி திமுக. பெண்களுக்கு கட்சியில் முக்கிய பங்கினை அளித்துள்ளது.
பிராந்திய மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று கருணாநிதி வழியில் மம்தாவும் போராடுகிறார். மாடுகள் விற்பனை தடைக்கு மம்தாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்றும் பிராந்திய கட்சிகள் மத்தியில் கூட்டாக ஆட்சி செய்ய வேண்டும் என்பதே திரிணமூல் விருப்பம்.
பிராந்திய கட்சிகள் டெல்லியில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுப்போம். மாநில கட்சிகள் டெல்லி அரசியலில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
மாநில கட்சிகள் டெல்லி செல்ல வேண்டும். அதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. நான் ரெடி... நீங்க ரெடியா என்று ஸ்டாலினைப் பார்த்து தமிழில் கேட்டார் டெரிக் ஓ பிரையன்.
மேடையில் ராகுல்காந்தியை வைத்துக்கொண்டே சவால் விடும் வகையில் டெரிக் ஓ பிரையன் பேசியது கேட்டு ஸ்டாலின் முகத்தில் எந்த வித பாவனையும் வெளிப்படுத்தாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தார். tamiloneindia

கருத்துகள் இல்லை: