
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் பெண் பொறியாளர் ஒருவர்
அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.< உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் பொறியாளர் அஞ்சலி ரத்தோர் (23). அரியானா மாநிலத்தை சேர்ந்த இவர் லாவா மொபைல் நிறுவனத்தில் பயிற்சி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை 6.34 மணியளவில் அஞ்சலி அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து காவலர்கள் , அஞ்சலி உடன் வசிக்கும் அவரது தோழி ஜோதி பயிற்சி வகுப்புக்கு செல்வதற்காக குடியிருப்பின் தரை தளத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு அஞ்சலி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து , அவர்களுடன் தங்கியுள்ள மற்ற 4 பெண்களின் உதவியுடன் அஞ்சலியை மருத்துவமனைக்கு எடுத்து சென்றார். ஆனால் ஆஞ்சலி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அஞ்சலியின் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. குடியிருப்பின் தரைத் தளத்தில் உள்ள லிஃப்டுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அஞ்சலியை சுட்டு கொன்றவரின் அடையாளம் இதுவரை தெரியவில்லை. அஞ்சலியுடன் கல்லூரியில் படித்தவர் தான் இதை செய்துள்ளார் என அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அஞ்சலியின் பேனை ஆய்வு செய்த போது , சுமார் 6.05 மணியளவில் நண்பர் ஒருவர் அழைத்ததின் பேரில் தான் அஞ்சலி தரை தளத்திற்கு வந்தது தெரியவந்தது. அதற்கு பின்னர் தான் அஞ்சலி சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.தீக்கதிர
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக