புதன், 31 மே, 2017

சென்னை ஐ ஐ டி மாணவர் தாக்குதல் ..8 மாணவர்கள் மீது வழக்கு பதிவு

சென்னை: சென்னை ஐஐடி மாணவர் சூரஜ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 மாணவர்கள் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை ஐஐடி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் திருவிழா நடத்தப்பட்டது. இதில், சுமார் 80-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் மாட்டிறைச்சி உணவு வகைகளை ஹோட்டலில் வாங்கிவந்து வளாகத்தின் உள்ளேயே இணைந்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.  இதையடுத்து மாட்டிறைச்சித் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த ஆய்வு மாணவரான சூரஜ் மீது நேற்று கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் சூரஜின் வலது கண்ணில் பலத்த காயம் அடைந்துள்ளது. தாக்குதலுக்கு ஆளான மாணவர் சூரஜ் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சூராஜிடம் கோட்டூர்புரம் போலீசார் மருத்துவமனையில் வாக்குமூலம் பெற்றனர். மேலும் சூரஜ் அளித்த புகாரின் பேரில் மணீஷ்குமார் சிங் உள்ளிட்ட 8 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல் ஐஐடி மாணவர் மணீஷ்குமார் சிங் அளித்த புகாரில் சூரஜ் உள்ளிட்ட இரண்டு 2 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. tamiloneindia

கருத்துகள் இல்லை: